பாலிக் புலாவ் (P053) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Balik Pulau (P053) Federal Constituency in Penang | |
![]() | |
மாவட்டம் | தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் ![]() |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 81,519 (2023)[1] |
வாக்காளர் தொகுதி | ஜெலுத்தோங் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | ஜார்ஜ் டவுன், பினாங்கு, பாலிக் புலாவ், புக்கிட் பாலிக் புலாவ், பத்து ஈத்தாம், புலாவ் பெத்தோங் |
பரப்பளவு | 147 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | ![]() |
மக்களவை உறுப்பினர் | முகமது பக்தியார் வான் சிக் (Muhammad Bakhtiar Wan Chik) |
மக்கள் தொகை | 132,344 (2020) [4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
பாலிக் புலாவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Balik Pulau; ஆங்கிலம்: Balik Pulau Federal Constituency; சீனம்: 峇央峇鲁国会议席) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் (Southwest Penang Island District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P053) ஆகும்.[6]
பாலிக் புலாவ் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து பாலிக் புலாவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பாலிக் புலாவ் புறநகர்ப்பகுதி பினாங்கு, தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தில்; பினாங்குத் தீவின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ள நகரம். மற்றும் இது தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் நிர்வாக மையமாகவும் உள்ளது.
1794 இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் (British East India Company); பாலிக் புலாவ் வேளாண் நகரம் நிறுவப்பட்டது. இன்றுவரை, பாலிக் புலாவின் பொருளாதாரம் வேளாண்மைத் துறையைப் பெரிதும் நம்பி உள்ளது. பினாங்கின் மிகவும் பிரபலமான விளைபொருட்களான ஜாதிக்காய், கிராம்பு மற்றும் டுரியான் பழங்கள் போன்றவை இங்கு இன்றைய வரையிலும் அதிகமாய் அறுவடை செய்யப் படுகின்றன.
பாலிக் புலாவ் நகர்ப் பகுதி பினாங்கு தீவின் மேற்குப் பகுதியில் அமைந்து இருந்தாலும், பரபரப்பான நகர மையத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் பொதுவாக அமைதியான நகர்ப்பகுதி என்று சொல்லலாம். இருப்பினும் அண்மைய கால நகரமயமாக்கல் பாலிக் புலாவ் நகரத்தையும் விட்டு வைக்கவில்லை. குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் துரிதமாகி வருகின்றன.[7]
பாலிக் புலாவ் அதன் பல்வேறு வகையான டுரியான்களுக்குப் பெயர் பெற்றது. ஒவ்வோர் ஆண்டும், மே மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரையிலான காலக் கட்டத்தில், பெரிய அளவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை ஈர்க்கின்றது.[8][9][10]
பாலிக் புலாவ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் பினாங்கு செலாத்தான் மக்களவைத் தொகுதியில் இருந்து பாலிக் புலாவ் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P040 | 1974–1978 | சம்சுரி சாலே (Shamsuri Md. Salleh) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P048 | 1986–1990 | முகமது சுப்கி டவுப் (Mohamad Subky Raof) | |
8-ஆவது மக்களவை | 1990–1995 | முகமது பாரிட் அரிபின் (Mohamed Farid Ariffin) | ||
9-ஆவது மக்களவை | P051 | 1995–1999 | நுங்சாரி அகமது ராடி (Nungsari Ahmad Radhi) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | முகமது சைன் ஒமார் (Mohd. Zain Omar) | ||
11-ஆவது மக்களவை | P053 | 2004–2008 | இல்மி யகயா (Hilmi Yahaya) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | முகமது யுசுமாடி (Mohd Yusmadi Yusoff) |
பாக்காத்தான் ராக்யாட் (பி.கே.ஆர்) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | இல்மி யகயா (Hilmi Yahaya) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
14-ஆவது மக்களவை | 2018–2022 | முகமது பக்தியார் சிக் (Muhammad Bakhtiar Chik) |
பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
80,264 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
64,937 | 75.98% | ▼ - 9.60% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
63,911 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
163 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
863 | ||
பெரும்பான்மை (Majority) |
1,582 | 2.47% | ▼ - 10.52 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
மலேசிய அரசாங்க அதிகாரப்பூர்வ அரசிதழ் (P.U. (B) 613); [11]சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[12] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
முகமது பக்தியார் வான் சிக் (Muhammad Bakhtiar Wan Chik) |
பாக்காத்தான் | 63,911 | 24,564 | 38.43% | - 12.74% ▼ | |
முகமது அரிசு இடாம் (Muhammad Harris Idaham) |
பெரிக்காத்தான் | - | 22,982 | 35.96% | + 35.96% ![]() | |
சா எடான் உசேன் சா (Shah Headan Ayoob Hussain Shah) |
பாரிசான் | - | 15,478 | 24.22% | - 13.96 % ▼ | |
சபாருடின் அகமது (Sabaruddin Ahmad) |
சுயேச்சை | - | 366 | 0.57% | + 0.57% ![]() | |
பசிலி முகமது (Fazli Mohammad) |
பெஜுவாங் | - | 341 | 0.53% | + 0.53% ![]() | |
ஜானி சொங் ஈவ் கீ (Johny Ch'ng Ewe Gee) |
சுயேச்சை | - | 180 | 0.28% | + 0.28% ![]() |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)