சத்ருஞ்ஜெய மலை கோயில்கள் | |
---|---|
![]() | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சத்ருஞ்ஜெய மலை, பாலிதானா, பவநகர் மாவட்டம், குஜராத் |
புவியியல் ஆள்கூறுகள் | 21°28′58.8″N 71°47′38.4″E / 21.483000°N 71.794000°E |
சமயம் | சமணம் |
சத்ருஞ்ஜெய மலை கோயில்கள் அல்லது பாலிதானா கோயில்கள், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், பவநகர் மாவட்டத்தில், பாலிதானா நகரத்தின் அருகில் உள்ள சத்ருஞ்ஜெய மலையில் அமைந்த சுவேதாம்பர சமண சமயத்தவர்கள் வழிபடும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட 863 கோயில்களின் தொகுப்பாகும். சத்ருஞ்ஜெய மலைக்கு நேமிநாதர் தவிர மற்ற அனைத்து சமணத் தீர்த்தங்கரர்கள் வருகை புரிந்துள்ளனர். இங்குள்ள கோயில் தொகுதிகளின் முதன்மையான கோயில், சமணத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிசபநாதருக்கு அர்பணிக்கப்பட்டதாகும்.
3000 படிக்கட்டுகளைக் கடந்து ரிசபநாதரின் முதன்மைக் கோயிலை அடைய வேண்டும். இக்கோயில்களின் தொகுதி, சமணர்களின் ஐந்து முக்கியத் புண்ணியத் தலங்களில் முதன்மையானதாகும். [1][2]
சமணர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது சத்ருந்ஜெய மலைக் கோயில் தொகுதிகளை கண்டு தரிசனம் செய்வதன் மூலம் மோட்சம் கிட்டும் என கருதுகின்றனர்.[3]
ஹிங்குலாஜ் மாதா, சத்ருஞ் ஜெய மலையில் உள்ள 863 சமணக் கோயில்களின் காவல் தெய்வம் ஆகும்.
![]() |
![]() | |
சத்ருஞ்ஜெய மலைக் கோயில்களின் அகலப்பரப்புக் காட்சி
|
{{cite book}}
: |work=
ignored (help)