பாலித்த தெவரப்பெரும Palitha Thewarapperuma පාලිත තෙවරප්පෙරුම | |
---|---|
சமூக வலுவூட்டல் துணை அமைச்சர் | |
பதவியில் 21 திசம்பர் 2018 – 21 நவம்பர் 2019 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னையவர் | ரஞ்சன் ராமநாயக்கா |
பின்னவர் | காலியாய் |
நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிரதேச அபிவிருத்தி துணை அமைச்சர் | |
பதவியில் 2 மே 2018 – 26 அக்டோபர் 2018 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னையவர் | சுமேதா ஜயசேன |
பின்னவர் | ஆனந்த அளுத்கமகே |
உள்துறை, வடமேற்கு மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் துணை அமைச்சர் | |
பதவியில் 6 ஏப்ரல் 2016 – 2 மே 2018 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னையவர் | ஹர்சா டி சில்வா |
பின்னவர் | எட்வர்ட் குணசேகர |
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 22 ஏப்ரல் 2010 – 3 மார்ச்சு 2020 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இலங்கை மேலாட்சி | 3 மே 1960
இறப்பு | 16 ஏப்ரல் 2024 களுத்துறை, இலங்கை | (அகவை 63)
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
துணைவர் | அமிதா நாலிங்கனி அமரதுங்க |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | மத்துகமை, களுத்துறை மாவட்டம், மேற்கு மாகாணம் |
முன்னாள் கல்லூரி | ஆனந்த சாஸ்த்திரலய தேசிய பாடசாலை, மத்துகமை |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | நில உரிமையாளர் |
பாலித்த குமார தெவரப்பெரும (Palitha Kumara Thewarapperuma, சிங்களம்: පාලිත තෙවරප්පෙරුම; 3 மே 1960 – 16 ஏப்ரல் 2024) இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் 2010 முதல் 2020 வரை களுத்துறை மாவட்ட தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் மைத்திரிபால சிறிசேனவின் அரசில் ஒரு துணை அமைச்சராகப் பணியாற்றினார்.[1]
தெவரப்பெரும 1960 மே 3 அன்று இலங்கையில் (அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்டது) பிறந்தார். இவர் களுத்துறை மாவட்டத்தின் மத்துகமை பிரதேசத்தின் உள்ள ஆனந்த சாஸ்த்திரலய தேசிய பாடசாலையில் கற்றார்.[2]
தெவரப்பெரும மத்துகமை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக அரசியலில் பிரவேசித்தார். 2002 ஆம் ஆண்டு அந்த சபையின் தலைவராக இருந்தார். சில காலம் களுத்துறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மேற்கு மாகாண சபை உறுப்பினராகவும் இருந்தார்.[3]
2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்த நிலையில் 2020 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் 2015 முதல் 2019 வரை சமூக வலுவூட்டல் துணை அமைச்சர், நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிரதேச அபிவிருத்தி துணை அமைச்சர் மற்றும் உள்துறை, வடமேற்கு மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் துணை அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்[3][4]
தெவரப்பெரும அமிதா நலிங்கனி அமரதுங்கவை மணந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றிருந்தார். இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.[1][5]
அவர் ஏப்ரல் 16, 2024 அன்று மின்சாரம் தாக்கி இறந்தார்.[5]
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)