பாலிபீடேட்சு அசாமென்சிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ராகோபோரிடே
|
பேரினம்: | பாலிபீடேட்சு
|
இனம்: | பா. அசாமென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
பாலிபீடேட்சு அசாமென்சிசு மாத்தேயு & சென், 2009[1] |
பாலிபீடேட்சு அசாமென்சிசு என்பது ராகோபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை தவளை சிற்றினம் ஆகும். இது இந்தியாவின் அசாமில் தேமாஜி மாவட்டத்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.
இது நடுத்தர அளவிலான தவளை (நீளம் 45 மிமீ) ஆகும். தலையானது அகலத்தைவிட நீளமானது. மூக்கு நீளமானது, கீழ் தாடைக்கு அப்பால் நீண்டுள்ளது. கண் விட்டத்தை விட நீளமான மூக்கினைக் கொண்டது. நாக்கு மிதமானது, அடர்த்தியானது, ஆழமாக பிளவுபட்டது. முன்கைகள் மிதமானவை. விரல்கள் நீண்டு, வலைப் பிணைப்பு இல்லாமல் இருக்கும். நன்கு வளர்ந்த வட்டுகளுடன் விரல் நுனிகள் காணப்படும். பின்னங்கால்கள் நீளமானது. தொடை எலும்பு கணுக்காலுள்ளெலும்பினைப் போன்று நீளமானது. கால்விரல்களில் மூன்றில் இரண்டு பங்கு வலையமைப்பு கொண்டது. முதுகு மென்மையானது.[2][3]