பாலுய் ஆறு Balui River சரவாக் | |
---|---|
அமைவு | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | காப்பிட் பிரிவு |
மாவட்டம் | பெலாகா மாவட்டம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | காப்புவாசு மலைத்தொடர் |
⁃ அமைவு | மலேசியா; |
முகத்துவாரம் | |
⁃ ஆள்கூறுகள் | 2°07′47″N 111°13′09″E / 2.129722°N 111.219167°E |
பாலுய் ஆறு (மலாய்: Sungai Balui; ஆங்கிலம்: Balui River); மலேசியா, சரவாக், காப்பிட் பிரிவு பெலாகா மாவட்டத்தில் உள்ள ஓர் ஆறு ஆகும். ராஜாங் ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.[1]
மலேசியாவின் மிகப் பெரிய பக்குன் நீர் மின் அணைத் திட்டம் (Bakun Hydro Electric Dam Project) பாலுய் ஆற்றில் அமைந்து உள்ளது.
பெலாகாவிற்கு வடக்கே பக்குன் அணை (Bakun Dam) உள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய அணை. இந்த அணை பெலாகாவிற்கு சுற்றியுள்ள பகுதிகளுக்கும்; தீபகற்ப மலேசியாவிற்கும் மின்சாரம் வழங்கும் நோக்கத்தைக் கொண்டது.
பொருளாதாரக் காரணமாக இதன் கட்டுமானம் பல முறை தாமதமானது. ஏற்கனவே பல பில்லியன் ரிங்கிட் செலவழிக்கப் பட்டது. அதனால் இந்தத் திட்டத்தைத் தொடர மத்திய அரசு முடிவு செய்தது. இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவுத் தொகை ரிங்கிட் 10 பில்லியன்.
ஜனவரி 2007-இல், பாக்குன் அணையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கடலடிக் கம்பிவடம் வழியாகத் தீபகற்ப மலேசியாவிற்கு மாற்றுவதற்கான திட்டத்தை மீண்டும் மலேசிய மத்திய அரசாங்கம் அறிவித்தது. கடலடிக் கம்பிவடம் 670 கி.மீ. தூரம் வரை நீண்டு, தீபகற்ப மலேசியாவின் ஜொகூர்; யோங் பெங் கடற்கரையை அடையும்.
2011-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை, சரவாக்கின் இயற்கைச் சூழலை நிரந்தரமாக மாற்றி அமைத்து இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.[2]