பாலே ஆறு Balleh River Sungai Balleh | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | ராஜாங் ஆறு |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | தென்சீனக் கடல் |
பாலே ஆறு (மலாய்: Sungai Balleh; ஆங்கிலம்: Balleh River); மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு ஆகும். ராஜாங் ஆற்றுடன், சிபு மாவட்டப் பகுதியில் பாலே ஆறு கலக்கிறது.[1] ராஜாங் ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாக உள்ளது.
பாலே ஆற்றங்கரைகளில் காட்டு மரங்களை வெட்டும் முகாம்கள் பலவற்றைக் காணலாம்; மற்றும் புதிய நீள வீடுகளையும் காணலாம். சரவாக் அரசாங்கத்தால் காட்டுமரம் வெட்டுதல் கட்டுப் படுத்தப்படுகிறது. அத்துடன் அவர்கள் தீவிரமான மறு நடவு திட்டத்தையும் கொண்டுள்ளது.
சரவாக்கின் பல கிராமப்புற மாவட்டங்களுக்குப் பயணம் செய்வதற்கான முதன்மைப் பாதையாக, பாலே ஆறு இன்றும் பயன்படுத்தப்படுகிறது.[2] பல்லே ஆற்றில் நாகமுஜோங் கிராமம் (Nagamujong Village) ஒரு முக்கியக் கிராமமாக அறியப்படுகிறது.
அந்தக் கிராமத்தில் நீள வீடுகள், ஒரு தொடக்கப் பள்ளி, ஒரு மருத்துவமனை, ஒரு தேவாலயம்; மற்றும் காட்டு மரங்களை வெட்டும் முகாம்கள் உள்ளன.[3] நாகமுஜோங் கிராமத்தின் உட்பகுதி காடுகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து இந்தக் கிராமத்தின் படகுத் துறைக்கு நிலக்கரி கொண்டு வரப்படுகிறது.