பால் வெர்னிக்கு Paul Wernick | |
---|---|
![]() | |
தேசியம் | கனடியன் |
பணி | திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் |
வாழ்க்கைத் துணை | ரீட்டா சியாவ்[1] |
பிள்ளைகள் | 2 |
பால் வெர்னிக்கு (ஆங்கிலம்: Paul Wernick) என்பவர் ஒரு கனடிய நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் சோம்பிலாண்ட் (2009), டெட்பூல் (2016), டெட்பூல் 2 (2018), மற்றும் டெட்பூல் 3 (2024) ஆகிய படங்களின் திரைக்கதைகளை இரெட்டு இரீசு உடன் இணைந்து எழுதியதற்காக மிகவும் பிரபலமானவர்.
வெர்னிக்கு மற்றும் ரீஸின் முதல் கூட்டுப்பணியானது 2009 ஆம் ஆண்டு வெளிவந்த 'சோம்பிலாண்ட்' திரைப்படமாகும், இது இவர்களின் நிர்வாகத்தில் கீழ் தயாரிக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் அக்டோபர் 2, 2009 அன்று சோனி பிக்சர்ஸால் வெளியிடப்பட்டது, மேலும் அந்த நேரத்தில் அதிக வசூல் செய்த ஜாம்பி திரைப்படம் ஆனது.[2]
அதைத்தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன் என்ற படம் வெளியானது.[3][4] இந்த படத்தில் டுவெயின் ஜான்சன், சானிங் டேட்டம், ரே பார்க், லுக் ப்ரேசி ஆகியோர் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாக $375 மில்லியன் வசூலித்தது.
ஆண்டு | தலைப்பு | எழுத்தாளர் | நிர்வாகம் தயாரிப்பாளர் |
இயக்குநர் |
---|---|---|---|---|
2009 | சோம்பிலாண்ட் | ஆம் | ஆம் | ரூபன் பிளைஷர் |
2013 | ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன் | ஆம் | இல்லை | ஜான் எம்.சு |
2016 | டெட்பூல் | ஆம் | ஆம் | டிம் மில்லர் |
2017 | லைப் | ஆம் | இல்லை | டேனியல் எசுபினோசா |
2018 | டெட்பூல் 2 | ஆம் | ஆம் | டேவிட் லீட்ச் |
2019 | 6 அண்டர்கிரவுண்ட் | ஆம் | ஆம் | மைக்கேல் பே |
சோம்பிலாண்ட்: டபுள் தாப் | ஆம் | ஆம் | ரூபன் பிளீஷர் | |
2022 | இசுபைடர்ஹெட் | ஆம் | இல்லை | ஜோசப் கோசின்ஸ்கி |
2023 | கோஸ்டேட் | ஆம் | இல்லை | டெக்ஸ்டர் பிளெட்சர் |
2024 | டெட்பூல் 3 | ஆம் | இல்லை | ஷாவன் லெவி |
ஆண்டு | தலைப்பு | எழுத்தாளர் | நிர்வாகம் தயாரிப்பாளர் |
உருவாக்கியவர் |
---|---|---|---|---|
2005 | இன்வேஷன் அயோவா | ஆம் | இல்லை | ஆம் |
2003–2004, 2013 | தி ஜோ ஷ்மோ ஷோ | ஆம் | ஆம் | ஆம் |
2019 | வேய்ன் | ஆம் | நிர்வாகம் | இல்லை |
2023 | ட்விஸ்ட்டேட் மெடல் | ஆம் | ஆம் | ஆம் |