பால்ஜி பெந்தர்கர் | |
---|---|
![]() 2013இல் இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல் முத்திரையில் பால்ஜி பெந்தர்கர் | |
பிறப்பு | பால்ஜி பெந்தர்கர் 3 மே 1897 |
இறப்பு | 26 நவம்பர் 1994 | (அகவை 97)
பணி | இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் |
பால்ஜி பெந்தர்கர் Bhalji Pendharkar (3 மே 1897 - 26 நவம்பர் 1994) இந்தியாவில் ஒரு திரையுலக ஆளுமையாவார். இந்த துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ளார்.
இராதாபாய் என்பவருக்கும் அவரது கணவர் கோபால் பெந்தர்கர் என்பவருக்கும் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.[1] பால்ஜி இந்திய திரைப்படத் துறையில் சில திரைப்பட ஆளுமைகளுடன் தொடர்பிலிருந்தார். இவரது பல நெருங்கிய உறவுகள் இந்திய திரையுலகில் புகழ் பெற்றிருந்தனர். அவர்களில் இவரது மூத்த சகோதரர் பாபுராவ் பெந்தர்கர், ஒன்றுவிட்ட சகோதரர், நடிகர்-இயக்குநர், மாஸ்டர் விநாயக் கர்நாடகி, தாய்வழி உறவினர் வி. சாந்தாராம் ஆகியோர் அடங்குவர் .
இவருக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அவர்களில் ஒருவரான இலீலா சந்திரகிரி என்பவர், 1930களில் மிஸ் இலீலா என்ற பெயரில் இந்தி மற்றும் மராத்தி படங்களில் நடித்து பாடிவந்தார். பால்ஜியை இலீலா முதன்முதலில் சந்தித்தபோது அவருக்கு ஏற்கனவே ஒரு பையனும், (ஜெயசிங்) ஒரு பெண்ணும் என இரண்டு குழந்தைகள் இருந்தன. பால்ஜி அவர்கள் இருவரையும் தத்தெடுத்தார். அந்தப் பெண் பின்னர் புதின ஆசிரியர் இரஞ்சித் தேசாயை மணந்தார். மேலும் அவர் மாதவி தேசாய் (2013 இல் இறந்தார்) என்று அழைக்கப்பட்டார். அவர் 'நாச்சா கா குமா' என்ற புத்தகத்தை எழுதினார். அவரது இரண்டாவது மகளின் பெயர் சரோஜ் சிந்தர்கர் என்பதாகும்.
ஊமைத் திரைப்படங்களின் சகாப்தத்தில் பால்ஜி தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பிரபாத் திரைப்பட நிறுவனத்தின் ஆரம்பகால படங்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். மேலும் சொந்த ஊரான கோலாப்பூரில் உள்ள மற்ற திரைப்பட அரங்கங்களிலும் பணியாற்றினார். பின்னர் தனது சொந்ததிரைப்பட அரங்கமான "ஜெய்பிரபா திரைப்பட அரங்கம்" என்பதை வாங்கி,[2] திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குனராகவுமானார். மராத்தியில் சில திரைப்படப் பாடல்களுக்கும் பாடல்களையும் எழுதினார். இவரது மிகவும் பிரபலமான திரைப்படங்கள்: நேதாஜி பல்கார் பற்றிய படம், தொரட்டஞ்சி கமலா, சத்ரபதி சிவாஜி பற்றிய படம், மோகித்யாஞ்சி மஞ்சுளா, மராத்தா தித்துட்கா மெல்வாவா, சாதி மான்சே, தம்ப்தி மாத்தி. இந்தி: மகாரதி கர்ணன், வாலிமி, சத்ரபதி சிவாஜி.கனிமி காவா போன்றவை
பால்ஜிக்கு 1991 ல் இந்திய அரசு தாதாசாகெப் பால்கே விருது வழங்கியது.