பாவந்தீப் சிங் (Pavandeep Singh) என்பவர் மலேசிய நாட்டைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்டக்காரர் ஆவார் [1].இவர் 1998 ஆம் ஆண்டு சனவரி மாதம் 17 ஆம் நாள் பிறந்தார். இவர் ஐசிசி உலக கிரிக்கெட் லீக் பிரிவுப் போட்டி மூன்றில் விளையாடினார். 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இவர் ஐசிசி உலக கிரிக்கெட் லீக் பிரிவுப் போட்டி நான்கில் விளையாடிய மலேசிய அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் [2]. இந்த விளையாட்டுப் போட்டியில் ஐந்து போட்டிகளில் ஒன்பது ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்கச் செய்து மலேசியா அணிக்காக முன்னணி விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார் [3].
2018 ஆம் ஆண்டு ஆகத்து மாதம், 2018 ஆம் ஆண்டிற்கான ஆசியா கோப்பை தகுதிப் போட்டியில் மலேசிய அணியில் பாவந்தீப் சிங் இடம்பிடித்தார் [4][5]. 2018-19 ஆம் ஆண்டிற்கான ஐசிசி உலக 20-20 போட்டியின் ஆசியா தகுதிப் போட்டிக்கான கிழக்கு துணை மண்டலக் குழுப் போட்டிகளில் விளையாடிய மலேசியா அணியிலும் இவர் இடம்பிடித்திருந்தார் [6]. 2018 அக்டோபர் 9 அன்று மியான்மருக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஒரே ஓட்டத்தை மட்டும் விட்டுக்கொடுத்து 5 ஆட்டக்காரர்களின் விக்கெட்டை வீழ்த்தி சாதனை புரிந்தார். மழையால் பாதிக்கப்பட்ட இப்போட்டியில் மியான்மர் 10.1 ஓவரில் 9/8 என்ற ஓட்டக் கணக்குடன் விளையாடிக் கொண்டிருந்தது [7]