பாவுர் ஆறு (Baur River) என்பது இந்தியாவில் இமயமலைப் பகுதியில் உள்ள ஒரு ஆறாகும். இது கீழ் இமயமலைப் பகுதிகளில் கோட்டாபாக் மற்றும் பஜவுனியாஹல்டுவைக் கடந்து, இறுதியாக குலர்போஜ் அணையை அடைகிறது.[1] இது அதன் அண்டை கிராமங்களின் பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்காற்றுகிறது. தேகான், பஜவுனியாஹல்டு, முசாபங்கர் பகுதியில் முழு பருவத்திற்கும் நீர்ப்பாசனம் இந்நதி மூலம் கிடைக்கின்றது.
பாவுர் ஆறு அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதால், இங்குக் காணப்படும் விலங்கினங்கள் பரவலாக வேறுபடுகிறது. ரோகு மீன் மற்றும் கட்லா மீன் போன்ற பல்வேறு வகையான மீன்கள் ஆண்டு முழுவதும் காணப்படுகின்றன.[2] சில பொதுவான நண்டுகளும் இந்த ஆற்றின் உணவு வளமான உள்ளன.