பசவையா இராச்சையா | |
---|---|
கேரள ஆளுநர் | |
பதவியில் 20 திசம்பர் 1990 – 9 நவம்பர் 1995 | |
முன்னையவர் | சரூப் சிங் |
பின்னவர் | பி. சிவ சங்கர் |
இமாச்சலப் பிரதேசத்தின் 6வது ஆளுநர் | |
பதவியில் 16 பிப்ரவரி 1990 – 19 திசம்பர் 1990 | |
முன்னையவர் | எச். ஏ. பிராரி (கூடுதல் பொறுப்பு) |
பின்னவர் | வீரேந்திர வர்மா |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1977–1980 | |
முன்னையவர் | எஸ். எம். சித்தையா |
பின்னவர் | சிறீநிவாச பிரசாத் |
தொகுதி | சாமராஜநகர், கருநாடகம் |
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1974–1977 [1] | |
தொகுதி | கருநாடகம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆலுர், சாமராசநகர் மாவட்டம், பிரித்தானிய இந்தியா | 10 ஆகத்து 1922
இறப்பு | 14 பெப்ரவரி 2000[2] | (அகவை 77)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு, ஜனதா தளம் |
மூலம்: [1] |
பசவையா இராச்சையா (Basavayya Rachaiah) (10 ஆகஸ்ட் 1922 - 14 பிப்ரவரி 2000[3] ) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராகவும்[4] [5] கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.[6] இவர் 1977இல் கர்நாடகாவின் சாமராஜநகரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] இவர் கேரளா, இமாச்சல பிரதேசத்தின் ஆளுநராக இருந்தார்.[8] [9] எஸ். நிஜலிங்கப்பா, பசப்பா தனப்பா ஜாட்டி, தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டில், இராமகிருஷ்ணா ஹெக்டே, சோ. ரா. பொம்மை ஆகிய முதலைமைச்சர்களின் தலைமையிலான கர்நாடக மாநில அமைச்சரவை உறுப்பினராக இருந்தார்.
இராச்சையா 1922இல் சாமராசநகரில் பிறந்தார். இவர், தொழிலில் வழக்கறிஞராக இருந்தார். இவருடைய மருமகன்களில் ஒருவரான பி. பி. நிங்கையா, ஜே. ஹெச். படேல் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். இராச்சையா 2000 இல் தனது 77 வயதில் இறந்தார்.[10]
மாநிலத்திற்கு இவர் ஆற்றிய சேவைகளுக்காக, மைசூரில் சாயாஜிராவ் சாலையில் உள்ள ஒரு சாலைக்கு இராச்சையாவின் பெயரிடப்பட்டது.