பி. இலங்கேசு | |
---|---|
பிறப்பு | பல்யாதா லங்கேஷ்ப்பா 8 மார்ச்சு 1935 கொங்கவல்லி, பிரித்தானிய இந்தியா (தற்போது ஷிமோகா மாவட்டம், கர்நாடகம், இந்தியா) |
இறப்பு | 25 சனவரி 2000 பெங்களூர், கர்நாடகம், இந்தியா | (அகவை 64)
தேசியம் | இந்தியன் |
பணி | எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், இயக்குநர், கவிஞர், திரைக்கதை எழுத்தாளர், ஆசிரியர் |
வாழ்க்கைத் துணை | இந்திரா இலங்கேசு |
பிள்ளைகள் | கௌரி லங்கேஷ், கவிதா லங்கேஷ், இந்திரஜித் லங்கேஷ் |
விருதுகள் | சிறந்த இயக்குனருக்கான தேசிய திரைப்பட விருது: 1976 சாகித்திய அகாதமி விருது: 1993 |
பால்யா இலங்கேசு (Palya Lankesh) (8 மார்ச் 1935 - 25 ஜனவரி 2000) இந்திய கன்னட மொழி கவிஞர், புனைகதை எழுத்தாளர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். மேலும் இவர் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனராவார்.
இலங்கேசு கர்நாடாகாவின் ஷிமோகாவில் உள்ள கொனகவள்ளி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். பெங்களூரு மத்திய கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பின்னர் மைசூர் மகாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.[1]
பிருகு என்ற அவரது புதினத்தை தழுவி 1976 ஆம் ஆண்டில் பல்லவி என்ற திரைப்படத்தை இநக்கினார். இத் திரைப்படம் இவருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றுத் தந்தது.[2] பெங்களூரு பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியாராக பணியாற்றிய இலங்கேசு அப் பணியை விட்டு விலகி 1980 ஆம் ஆண்டில் கன்னட கலாச்சாரம் மற்றும் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய முதல் கன்னட பத்திரிகையான லங்கேஷ் பத்திரிகையை தொடங்கினார்.[3]
இலங்கேசுவின் முதல் படைப்பான கெரேய நீரனு கெரேஜ் செல்லி என்ற சிறுகதைத் தொகுப்பு 1963 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. பிருகு (பிளவு), முசஞ்சேய கதபிரசங்கா (அந்தி வேளையில் ஒரு கதை), அக்கா (சகோதரி) ஆகிய புதினங்களும், டி. பிரசன்னனா கிரிஹஸ்தஷ்ரம (டி.பிரசன்னாவின் வீட்டு உரிமையாளர்)[4], சங்கராந்தி (புரட்சி)[5], நன்னா தங்கிகொந்தி காண்டு கோடி (என் சகோதரிக்கு ஒரு மாப்பிள்ளை) [6]மற்றும் குணமுகா (சுகம்) என்ற நாடகங்களும், உமபதியா உதவித்தொகை யாத்ரே (உமபதியின் உதவித்தொகை பயணம்), கல்லு கரகுவா சமயா (கல் உருகும்போது) என்ற சிறுகதை தொகுப்புகளும் இவரது பிரபலமான படைப்புகளாகும். கல்லு கரகுவா சமயா என்ற சிறுகதை தொகுப்புக்காக 1993 ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமி விருதை வென்றார். இவரது புத்தகங்கள் ஆங்கிலம், தமிழ், இந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இலங்கேசு 1980 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டில் மரணமடையும் வரை லங்கேசு பேத்ரிக் இதழின் ஆசிரியராக இருந்தார்.[7] இவர் மதச்சார்பற்ற, சாதி எதிர்ப்பு மற்றும் இந்துத்துவ எதிர்ப்பு கருத்துக்களுக்காக அறியப்படுகிறார்.[8] லங்கேசு பேத்ரிக்கை தொடங்குவதற்கு முன்பு, அவரும் நண்பர்களான தேஜஸ்வி மற்றும் கே.ராமதாஸ் ஆகியோர் கர்நாடகாவின் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு மக்களை தங்கள் புதிய சோசலிசக் கட்சியான கர்நாடக பிரகதிரங்க வேடிகேக்கு அணிதிரட்டினர். இப்பயணத்தால் சமூக அவலங்களை எடுத்துரைக்கும் எழுத்தாளாராக மாறினார்.[9] அவரது மரணத்திற்குப் பிறகு லங்கேசு பேத்ரிக் இதழ் இரண்டாக பிளவுற்றது. ஒன்று அவரது மகளான கௌரி லங்கேசினாலும், மற்றொன்று அவரது மகனான இந்திரஜித் லங்கேசினாலும் நிர்வகிக்கப்பட்டன.[10] லங்கேசின் மற்றொரு மகள் திரைப்பட இயக்குநர் கவிதா லங்கேசு ஆவார்.[11] லங்கேஷ் பேத்ரிக் முதல் கன்னட பத்திரிகையாக, கர்நாடக அரசியல் மற்றும் கலாச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது ஹாய் பெங்களூர், அக்னி போன்ற பிற செய்தித்தாள்களை வெளியிட வழிவகுத்தது. மேலும் இலங்கேசு பத்திரிகை குற்றம் மற்றும் அரசியல் ஊழல்களில் அதிக கவனம் செலுத்தியது.[12]
இலங்கேசு 2000 ஆம் ஆண்டில் சனவரி 25 அன்று அவரது 64 வயதில் மாரடைப்பால் மரணமானார்.[13]
பல்லவி திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனரிற்கான தேசிய விருதை 1976 ஆம் ஆண்டில் பெற்றுக் கொண்டார். கல்லு கரகுவா சமயா மாத்து இத்தாரா கதேகலுக்கான 1993 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருதை வென்றார். 1986 ஆம் ஆண்டில் கர்நாடக சாகித்திய அகாடமி கௌரவ விருதை பெற்றார். மேலும் அவருக்கு பி.எச்.ஸ்ரீதரா பிரஷஸ்தி, கர்நாடக ராஜ்ய நாடக அகாதமி பிரஷஸ்தி, ஆர்யபட்டா சாகித்ய பிரஷஸ்தி ஆகிய விருதுகள் வரங்கப்பட்டுள்ளன.
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)
{{cite web}}
: |first4=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)
{{cite web}}
: External link in |title=
(help)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)
{{cite web}}
: |last2=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)