பி. எஸ். நிவாஸ் | |
---|---|
பிறப்பு | கோழிக்கோடு, கேரளம், இந்தியா |
இறப்பு | 1 பெப்ரவரி 2021 |
பணி | ஒளிப்பதிவாளர் இயக்குநர் (திரைப்படம்) திரைப்படத் தயாரிப்பாளர் |
பி. எஸ். நிவாஸ் (P. S. Nivas; இறப்பு: 1 பெப்ரவரி 2021) ஓர் இந்திய ஒளிப்பதிவாளர், இயக்குநர் (திரைப்படம்) மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் மலையாளத் திரைப்படத்துறை, தமிழகத் திரைப்படத்துறை, மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறைகளில் பணியாற்றியவர். 1976 ஆம் ஆண்டு வெளிவந்த "மோகினியாட்டம்" என்ற மலையாளத் திரைப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவுக்காக (இந்திய) தேசிய விருதினைப் பெற்றவர்.[1][2][3][4][5][6][7] இவர் பாரதிராசாவுடன் இணைந்து எட்டு படங்களில் பணியாற்றியுள்ளார். புற்றுநோய் காரணமாக 1 பெப்ரவரி 2021 இல் இவர் கோழிக்கோடு மருத்துவமனை ஒன்றில் மரணமடைந்தார்.[8]