பி. கே. குருதாசன் | |
---|---|
![]() | |
முன்னாள் சமஉ, மேனாள்வேலைவாய்ப்பு அமைச்சர் | |
முன்னையவர் | பாபு திவாகரன் |
பின்னவர் | அவரே |
தொகுதி | கொல்லம் |
முன்னையவர் | அவரே |
பின்னவர் | எம். முகேஸ் |
தொகுதி | கொல்லம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 சூலை 1935 பரவூர், கொல்லம் மாவட்டம், கேரளா, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி |
துணைவர் | சி. லில்லி |
பி. கே. குருதாசன் (பிறப்பு: 10 சூலை 1935) ஓர் இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் ஆவார். இவர் 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கேரள அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்துள்ளார். இவர் கேரளா சட்ட மன்றத்தில் கொல்லம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநிலத் தலைவர் மற்றும் சிபிஐ (எம்) மத்திய குழுவின் உறுப்பினர் ஆவார். குருதாசன் முன்னர் சி.ஐ.டி.யு.வின் கேரள மாநில யூனியனின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.[1]
குருத்சன் கிருஷ்ணன் மற்றும் யேசோதாவிற்கு மகனாக ஜூலை 10, 1935 அன்று கொல்லம் மாவட்டத்தில்பரவூரில் பிறந்தார். அவரது பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை நிறைவு செய்தபின் குருதசான் இளம் வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பூஜப்பூரா மத்திய சிறையில் 19 மாதங்களுக்கு அவசர கால கட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்..