பன்னியம்பள்ளி கிருஷ்ணான்குட்டி வாரியர் | |
---|---|
பிறப்பு | 5 சூன் 1921 கேரளம், கோட்டக்கல் |
தொழில் | ஆயுர்வேத மருத்துவர் |
தேசியம் | இநிதியர் |
காலம் | 20ஆம் நூற்றாண்டு |
கையொப்பம் | |
பி. கே. வாரியர் (P. K. Warrier) என்று பிரபலமாக அறியப்பட்ட பன்னியம்பள்ளி கிருஷ்ணன்குட்டி வாரியர் (பிறப்பு 5 ஜூன் 1921-10 சூலை 2021) என்பவர் ஒரு இந்திய ஆயுர்வேத மருத்துவர் ஆவார். இவர் இந்திய மாநிலமான கேரள மாநிலத்தில் மலப்புறம் மாவட்டம் கோட்டக்கல்லில் பிறந்தவர். [1] இவர் கோட்டக்கல் ஆர்யா வைத்ய சாலையின் தலைமை மருத்துவரும், நிர்வாக அறங்காவலரும் ஆவார். [2] இவர் ஆர்யா வைத்ய சாலையின் நிறுவனரான வைத்தியரத்னம் பி. எஸ். வாரியரின் இளைய மருமகன் ஆவார்.
1999 ஆம் ஆண்டில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தால் இவருக்கு கெளரவ டி.லிட் பட்டம் வழங்கப்பட்டது. [3] பி. கே. வாரியருக்கு அப்போதைய மகாராட்டிரா ஆளுநர் பி. சி. அலெக்சாண்டர் 30 வது தன்வந்த்ரி விருதை வழங்கினார். [4] ஆயுர்வேதத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளை பாராட்டும்விதமாக இவருக்கு 1999 இல் பத்மசிறீ விருதும், [5] 2010 இல் [5] பத்ம பூசண் விருதையும் இந்திய அரசிடமிருந்து பெற்றார். [6] [7]
சமீபத்தில் தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடிய இவர் 10 சூலை 2021 இல் காலமானார்.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)