பி. டி. சீனிவாச அய்யங்கார் (P. T. Srinivasa Iyengar, 1863–1931) என்பவர் வரலாற்றாய்வாளர், மொழியியல் அறிஞர், மற்றும் கல்வியாளர் ஆவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியவர்.
தஞ்சை மாவட்டம் புள்ளைபூதங்குடி என்னும் ஊரில் பிறந்த சீனிவாச அய்யங்கார், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியிலும் திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
தாம் படித்த அதே புனித சூசையப்பர் கல்லூரியில் விரிவுரையாளராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். விசாகப்பட்டினம் திருமதி ஏ வி.என். கல்லூரியில் முதல்வராக 27 ஆண்டுகள் பணியாற்றினார்.
இவரது வரலாற்று அறிவைக் கண்டுணர்ந்த சென்னைப் பல்கலைக் கழகம் இவரை இந்திய வரலாற்றுத் துறையில் இணைப் பேராசிரியர் பொறுப்பில் பணி யமர்த்தியது.[1]