பி. பரமேஷ்வரன் | |
---|---|
பிறப்பு | 1927 சேர்தலா, கேரளா, இந்தியா |
இறப்பு | (அகவை 93) |
தேசியம் | இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
கல்வி | இளங்கலை வரலாறு |
அறியப்படுவது | இந்துத்துவா சிந்தனையாளர் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் பிரசாரகர் நிறுவன இயக்குநர், கேரளா பாரதிய விசாரா கேந்திரம் தலைவர், விவேகானந்த கேந்திரம் இயக்குநர், புதுதில்லி தீனதயாள் ஆராய்ச்சி நிறுவனம் |
விருதுகள் | பத்ம விபூசண் 2018 பத்ம ஸ்ரீ 2004 |
வலைத்தளம் | |
http://vicharakendram.org |
பி. பரமேஷ்வரன் (P. Parameswaran; 1927 – 9 பிப்ரவரி 2020), கேரளா மாநிலம், ஆலப்புழை மாவட்டம், சேர்தலா வட்டம், முகம்மா கிராமத்தில 1927-ஆம் ஆண்டில் பிறந்த பி. பரமேஷ்வரன், சங்கனாச்சேரி, எஸ்.பி. கல்லூரியிலும், பின்னா் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பயின்றவர். 1951-ஆம் ஆண்டில் கல்லூரிக் காலத்தின் போதே, ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தில் இன்ணைந்து பணியாற்றினார். பின்னா் ஆா்.எஸ்.எஸ். அமைப்பில் முழு நேர பிரசாரகராக பணியாற்றி வந்தாா்.
பின்னர் இவர் பாரதியஜன சங்கத்தின் செயலாளராகவும் (1967-1971), துணைத் தலைவராகவும் (1971-1977)[1], புதுதில்லியில் உள்ள தீன்தயாள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (1977-1982) இயக்குநராகவும் இருந்துள்ளார். மிசா காலங்களில் கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் கேரளா மாநிலத் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் கேரள மக்களிடையே தேசியவாத எண்ணங்களை வளர்ப்பதற்காக 1982 ஆம் ஆண்டில் கேரளா பாரதிய விசாரா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவினார். இவர் விவேகானந்த கேந்திரத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர்.
இவர் தமது 93 வயதில் உடல்நலக் குறைவால் 9 பிப்ரவரி 2020-இல் மறைந்தார். [3] [4][5]
{{cite web}}
: |first3=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)