பி. லெனின் | |
---|---|
கேரளத்தில் உள்ள சவ்வரா மலையில் ஆவணப்படத்தின் படப்பிடிப்பின் போது, லெனின் | |
பிறப்பு | பீம்சிங் லெனின் 15 ஆகத்து 1947 |
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்பட படத் தொகுப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1966–தற்போதுவரை |
உறவினர்கள் | ஏ. பீம்சிங் (தந்தை) |
பி. லெனின் (B. Lenin, பிறப்பு: பீம்சிங் லெனின்) என்பவர் தமிழ், மலையாளம், இந்தி திரைப் படங்களில் பணிபுரியும் ஓர் இந்திய திரைப்பட படத் தொகுப்பாளர், எழுத்தாளர், இயக்குநர் ஆவார். தமிழ்த் திரைப்படப் படைப்பாளியான ஏ. பீம்சிங்கின் மகனான லெனின், உதவி படத் தொகுப்பாளராகத் திரைப்படத் துறையில் நுழைந்தார். பின்னர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் (1979) திரைப்படத்தின் மூலம் சுயாதீன படத் தொகுப்பாளராக அறிமுகமானார். 1980 களின் நடுப்பகுதியில், லெனின் தன் நீண்டகால உதவியாளர் வி. டி. விஜயனுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். இருவரும் எலி மை ஃப்ரெண்ட் என்ற ஆங்கிலத் திரைப்படத்தைத் தவிர தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் படத் தொகுப்பு செய்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டு வரை, லெனின் சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படத் தொகுப்புக்கான விருதுகள் உட்பட ஐந்து தேசிய திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். 2011ல் இந்திய திரைப்படக் கூட்டமைப்பு தலைவராக இருந்தார்.
லெனின் எட்டு குழந்தைகளில் ஒருவராக பொண்டில் ராஜ்புத் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஏ. பீம்சிங் தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நன்கு அறியப்பட்ட இயக்குநராக இருந்தார்.[1] லெனின் தன் தந்தையின் இணை இயக்குநராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் அவரது பல படங்களுக்கு படத் தொகுப்பில் உதவினார்.[2] ஆய்வக நுட்பவியல் மற்றும் ஒலிப் பொறியியல் துறையிலும் அனுபவம் பெற்றவராகவும் ஆனார்.[2] உதவியாளராகப் பல திரைப்படங்களில் பணியாற்றியப் பிறகு, லெனின் 1979 இல் மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் சுயாதீன படத் தொகுப்பாளராக அறிமுகமானார். இவர் ஒரு சுயாதீன படத் தொகுப்பாளராக பணியைத் துவக்கினாலும், பின்னர் இவர் தன் உதவியாளர் வி. டி. விஜயனுடன் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் இருவரும் 80 மற்றும் 90 களில் நாயகன், கீதாஞ்சலி, அஞ்சலி, காதலன் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றினர். சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றனர் .[3]
இவர் 1983 இல் எத்தனை கோணம் எத்தனை பார்வை (1983) மூலம் இயக்குநராக அறிமுகமானார், மேலும் நான்கு திரைப்படங்கள் மற்றும் நான்கு திரைப்படமற்ற படங்களை இயக்கினார். இவரது குறும்படமான நாக்-அவுட் (1992) விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. அது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான இஸ்லாமிய விமர்சகர்கள் விருதைப் பெற்றது.[4] லெனின் திரைப்படமல்லா படத்திற்கான சிறந்த இயக்குநருக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றார்.[5] மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் தனது இரண்டாவது குறும்படமான குற்றாவளியை இயக்கினார், இது 43 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த படத் தொகுப்புக்கான விருதைப் பெற்றது.[4] 2002ல் லெனின் ஊருக்கு நூறு பேர் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் அவருக்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைத் தவிர, சிறந்த இயக்குநருக்கான விருதையும் பெற்றுத் தந்தது.[2] மரணதண்டனை தொடர்பான இந்தப் படம் விமர்சன ரீதியான வரவேற்பைப் பெற்றது.[2] சொல்லடி சிவசக்தி உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.[5] லெனின் 57வது தேசிய திரைப்பட விருதுகளின் (2010) நடுவர் குழு உறுப்பினர் மற்றும் 2011 இல் ஆஸ்கார் தேர்வுக் குழுவின் (FFI) தலைவர் போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளார் [4][6] இப்போது புனே திரைப்படக் கல்லூரி போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் பங்களித்து வருகிறார், லெனின் இப்போது கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற திரைப்பட கல்வி நிறுவனமான கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரியில் அதன் துறைத் தலைவராக இணைந்து அதன் மாணவர்களுக்கு நிகழ்நேர தொழில்முறை திரைப்பட உருவாக்க அறிவைப் பெற தன் பரந்த அனுபவத்தின் மூலம் உதவிவருகிறார்.[7]
ஆண்டு | படம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|
1979 | உதிரிப்பூக்கள் | தமிழ் | |
1980 | பூட்டாத பூட்டுகள் | தமிழ் | |
1981 | பன்னீர் புஷ்பங்கள் | தமிழ் | |
1982 | கோழி கூவுது | தமிழ் | |
1982 | மெட்டி | தமிழ் | |
1982 | அழகிய கண்ணே | தமிழ் | |
1983 | பல்லவி அனுபல்லவி | கன்னடம் | |
1983 | எத்தனை கோணம் எத்தனை பார்வை | தமிழ் | |
1984 | பரன்னு பரன்னு பரன்னு | மலையாளம் | |
1984 | உணரூ | மலையாளம் | |
1984 | சாகசமே ஜீவிதம் | தெலுங்கு | |
1984 | கை கொடுக்கும் கை | தமிழ் | |
1984 | பொழுது விடிஞ்சாச்சு | தமிழ் | |
1985 | மீண்டும் ஒரு காதல் கதை | தமிழ் | |
1985 | தென்றலே என்னைத் தொடு | தமிழ் | |
1985 | பகல் நிலவு | தமிழ் | |
1985 | இதயகோயில் | தமிழ் | |
1985 | திங்கலாழிட்சி நல்ல திவசம் | மலையாளம் | |
1986 | கரியிலக்கட்டு கம்பம் | மலையாளம் | |
1986 | அறப்பட்ட கெட்டிய கிராமத்தில் | மலையாளம் | |
1986 | கண்ணுக்கு மை எழுது | தமிழ் | |
1986 | தேசதனக்கிளி கரையரில்லா | மலையாளம் | |
1986 | மௌன ராகம் | தமிழ் | |
1986 | நமக்கு பார்க்கன் முந்திரி தோப்புகள் | மலையாளம் | |
1987 | ரிதுபேதம் | மலையாளம் | |
1987 | நம்பராதி பூவு | மலையாளம் | |
1987 | தூவனதும்பிகள் | மலையாளம் | |
1987 | நாயகன் | தமிழ் | |
1988 | சொல்ல துடிக்குது மனசு | தமிழ் | |
1988 | அபரன் | மலையாளம் | |
1988 | அன்று பெய்த மழையில் | தமிழ் | |
1988 | அபிநந்தனா | தெலுங்கு | |
1988 | டெய்ஸி | மலையாளம் | |
1988 | மூண்ணம் பக்கம் | மலையாளம் | |
1989 | ராஜாதி ராஜா | தமிழ் | |
1989 | கீதாஞ்சலி | தெலுங்கு | |
1989 | உல்சவபித்தேன்னு | மலையாளம் | |
1989 | இன்னாலே | மலையாளம் | |
1989 | அபூர்வ சகோதரர்கள் | தமிழ் | |
1989 | வெற்றி விழா | தமிழ் | |
1989 | சீசன் | மலையாளம் | |
1990 | மை டியர் மார்த்தாண்டன் | தமிழ் | |
1990 | தாழ்வாரம் | மலையாளம் | |
1990 | அஞ்சலி | தமிழ் | |
1991 | தாலாட்டு கேக்குதம்மா | தமிழ் | |
1991 | அமரம் | மலையாளம் | |
1991 | தாயம்மா | தமிழ் | |
1991 | கடுவன் | மலையாளம் | |
1991 | சைதன்யா | தெலுங்கு | |
1991 | வசந்தகால பறவை | தமிழ் | |
1992 | சிங்கார வேலன் | தமிழ் | |
1992 | சூரியன் | தமிழ் | |
1992 | மகுடம் | தமிழ் | |
1992 | மாலூட்டி | மலையாளம் | |
1992 | நட்சத்திரகூடரம் | மலையாளம் | |
1992 | ஆவாரம் பூ | தமிழ் | |
1992 | மீரா | தமிழ் | |
1993 | ஐ லவ் இந்தியா | தமிழ் | |
1993 | வெங்கலம் | மலையாளம் | |
1993 | சாமயம் | மலையாளம் | |
1993 | ஆத்மா | தமிழ் | |
1993 | பதேயம் | மலையாளம் | |
1993 | ஜென்டில்மேன் | தமிழ் | |
1993 | சொப்பனம் | தமிழ் | |
1994 | பிரியங்கா | தமிழ் | |
1994 | சீவலப்பேரி பாண்டி | தமிழ் | |
1994 | மே மாதம் | தமிழ் | |
1994 | காதலன் | தமிழ் | சிறந்த படத் தொகுப்புக்கான தேசிய திரைப்பட விருது (shared with V. T. Vijayan) Tamil Nadu State Film Award for Best Editor |
1994 | வனஜா கிரிஜா | தமிழ் | |
1995 | லக்கி மேன் | தமிழ் | |
1995 | மோகமுள் | தமிழ் | |
1995 | மாயா பஜார் | தமிழ் | |
1995 | ஹைவே | மலையாளம் | |
1995 | குற்றவாளி | தமிழ் | குறும்படம் திரைப்படம் அல்லாத படத்தின் படத்தொகுப்பிற்கான தேசிய திரைப்பட விருது (also for Oodaha) சிறந்த குறும்படத்திற்கான இஸ்லாமிய விமர்சகர்கள் விருது |
1995 | ஊடாக | தமிழ் | குறும்படம் திரைப்படம் அல்லாத படத்தின் படத்தொகுப்பிற்கான தேசிய திரைப்பட விருது ( குற்றவாளிக்கும்) |
1996 | தேசதானம் | மலையாளம் | |
1996 | மகாபிரபு | தமிழ் | |
1996 | சிவசக்தி | தமிழ் | |
1996 | தேவராகம் | மலையாளம் | |
1996 | சேனாதிபதி | தமிழ் | |
1996 | இந்தியன் | தமிழ் | |
1996 | காதல் தேசம் | தமிழ் | |
1996 | அலெக்சாண்டர் | தமிழ் | |
1997 | ஒரு யாத்திரமொழி | மலையாளம் | |
1997 | ரட்சகன் | தமிழ் | |
1998 | காதலே நிம்மதி | தமிழ் | |
1998 | வேலை | தமிழ் | |
1998 | அவள் வருவாளா | தமிழ் | |
1998 | கல்லு கொண்டொரு பெண் | மலையாளம் | |
1998 | ஜீன்ஸ் | தமிழ் | |
1999 | வாலி | தமிழ் | |
1999 | முதல்வன் | தமிழ் | |
2000 | குஷி | தமிழ் | |
2001 | லூட்டி | தமிழ் | |
2001 | குஷி | தெலுங்கு | |
2001 | நின்னு சூடாலனி | தெலுங்கு | |
2001 | தில் | தமிழ் | |
2001 | 12 பி | தமிழ் | |
2001 | நாயக்: தி ரியல் ஹீரோ | இந்தி | |
2001 | ஊருக்கு நூறு பேர் | தமிழ் | |
2005 | உள்ளம் கேட்குமே | தமிழ் | |
2005 | தவமாய் தவமிருந்து | தமிழ் | |
2006 | சாசனம் | தமிழ் | |
2007 | சென்னை 600028 | தமிழ் | |
2007 | பெரியார் | தமிழ் | |
2008 | புதல் முதல் முதல் வரை | தமிழ் | |
2008 | மஞ்சாடிகுரு | மலையாளம் | |
2008 | மெய்பொருள் | தமிழ் | |
2009 | குளிர் 100° | தமிழ் | |
2010 | நம்ம கிராமம் | தமிழ் | சிறந்த படத் தொகுப்பாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது |
2011 | பால் | தமிழ் | |
2011 | உச்சிதனை முகர்ந்தால் | தமிழ் | |
2011 | ரோட்சைட் அம்பானிஸ் | தமிழ் | குறும்படம் |
2012 | சுழல் | தமிழ் | |
2012 | கருப்பம்பட்டி | தமிழ் | |
2012 | கிழக்கு பாத்த வீடு | தமிழ் | |
2014 | ராமானுசன் | தமிழ் | |
2015 | தி எல்லோ பெஸ்டிவில் | தமிழ் | குறும்படம் |
2015 | அப்பாவும் வீஞ்சும் | மலையாளம் | |
2016 | எடவப்பதி | மலையாளம் | |
2016 | இஷ்டி | சமசுகிருதம் | |
2017 | களவாடிய பொழுதுகள் | தமிழ் | |
2021 | ஐந்து உணர்வுகள் | தமிழ் |
ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
1980 | நதியை தேடி வந்த கடல் | தமிழ் | |
1982 | பண்ணைபுரத்து பாண்டவர்கள் | தமிழ் | |
1983 | எத்தனை கோணம் எத்தனை பார்வை | தமிழ் | |
1988 | சொல்ல துடிக்குது மனசு | தமிழ் | |
1992 | நாக்-அவுட் | தமிழ் | குறும்படம் திரைப்படம் அல்லாத படத்திற்கான சிறந்த இயக்குநருக்கான தேசிய திரைப்பட விருது |
2001 | ஊருக்கு நூறு பேர் | தமிழ் | சிறந்த இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருது சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது |
2016 | கண்டதை சொல்லுகிறேன் | தமிழ் |
ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
1998 | காதலே நிம்மதி | தமிழ் | "கந்தன் இருக்கும் இடம்" பாடலில் சிறப்புத் தோற்றம் |
ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
1970 | கோபி | இந்தி | |
1972 | மாலிக் | இந்தி | |
1972 | பம்பாய் டூ கோவா | இந்தி | |
1972 | ஜோரூ கா குலாம் | இந்தி | |
1974 | டூ பூல் | இந்தி | |
1974 | நயா தின் நை ராத் | இந்தி | |
1976 | சப்சே படா ரூபாயா | இந்தி |