பி.டி. பருத்தி (Bt cotton) என்பது மரபணு மாற்றப்பட்ட பருத்திவகை ஆகும். இது பூச்சிகளை எதிர்த்து பூச்சிக்கொல்லிகளை உருவாக்கிக் கொள்கிறது.
பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் சுருக்கமாக பி டி என்னும் நுண்ணுயிரியாகும் இதில் 200 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன இவை உயிர்க்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பூச்சிகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியன. மிக முக்கியமாக இந்த பி டி நச்சு நுண்ணுயிரிகள் விட்டில் பூச்சி, வண்ணத்துப் பூச்சி, வண்டுகள், இருசிறகிப் பூச்சிகள், போன்றவற்றின் குடம்பிகளின் (லார்வா) உயிருக்கு அச்சுருத்தலானவை.[1] அமெரிக்காவில் மண்ணில் உள்ள ஒரு வகை பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் நுண்ணுயிரியின் மரபணுவான “பி.டி” புரத நஞ்சு படிகத்தை, பழுப்புநிறமாக பருத்திக்குள் செருகப்பட்டு, அதன் திசுக்களில் இந்த இயற்கை பூச்சிக்கொல்லி உற்பத்தி செய்யப்படுமாறு. வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. இவை பருத்தியில் காய்ப்புழுக்களை அழிக்கும் தண்மை கொண்டதாக உள்ளன. பல பகுதிகளில், வணிகரீதியிலான பருத்திப் பயிரை சாப்பிடும் முக்கிய பூச்சியான காய்ப்புழு லெபிடோப்ட்டனின், lepidopteran) குடம்பிகள் (லார்வா) என்னும் காய்ப்புழுக்களை மரபணு மாற்றப்பட்ட மி டி பருத்தி புரதத்தால் கொல்லப்படுகின்றன. இதனால் லெபிடோப்ட்டன் பூச்சிகளைக் கொல்ல பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டிய தேவையை இல்லாமல் போகிறது. இது பூச்சிக்கொல்லிகளுக்கான செலவினைக் குறைத்து, அதே சமயம் நன்மை செய்யும் உயிர்களுக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதாமல், விவசாய சூழலில் இயற்கை பூச்சி வேட்டைச் சங்கிலியை உண்டாக்குகிறது.
பி டி பருத்தியானது அனைத்து வகைப் பூச்சிகளையும் கட்டுப்படுத்துவதில்லை குறிப்பாக செடிப்பேன், செடிப் பூச்சி (plant bugs), பிழி பூச்சி (stink bugs) போன்ற பருத்தி பூச்சிகளுக்கு எதிராக பயனற்றதாகும். இதனால் சூழ்நிலைகளை பொறுத்து இந்த பூச்சிகளைத் தடுக்க பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தவேண்டி வரலாம். சீனாவில் பி.டி. பருத்தி பயிர்கள் குறித்து சீன விவசாயக் கொள்கை மையம் மற்றும் சீன அகாடமி ஆஃப் சைன்ஸ் ஆகியவற்றின் மூலம் 2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில், இதில் பூச்சிக்கொல்லிகள் பொதுவாக கட்டுப்படுத்தப்படுகின்றன ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, சில இரண்டாம் நிலை பூச்சிகள் அதிகரித்துள்ளன, இதனால் பி.டி. பருத்திக்கு ஒத்த அளவிற்கு பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஏற்படுகிறது மேலும் இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகளை வாங்கும் கூடுதல் செலவினத்தால் விவசாயிகளுக்கு குறைந்த இலாபமே கிடைக்கிறது.[2] என்று குறிப்பிட்டுள்ளது.
பேசில்லஸ் எனும் நுண்ணுயிரியின் மரபணுவைக் கொண்டு “பி.டி” புரத நஞ்சு படிகம் “என்டோ டாக்சின்” மூலம் மரபணு மாற்றப்பட்ட பருத்தி “போல்கார்டு –மான்சாண்டோ”வால் உருவாக்கப்பட்டது.[1] பூச்சிகள் பருத்தித் தாவரத்தைத் தாக்கிச் சாப்பிடும் பொழுது, பூச்சியின் வயிற்றுக்குள் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக நச்சுகள் கரைக்கப்படுகின்றன. இதனால் செல்கள் இறக்க ஆரம்பித்து இறுதியில் பூச்சி மரணமடைகிறது.
பி.டி. மரபணு மாற்றப்பட்ட பருத்திக்கு 1993 ஆம் ஆண்டில் முதலில் அமெரிக்காவில் சோதனை முயற்சிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக பயன்பாட்டிற்காக முதலில் அனுமதிக்கப்பட்டது.[3] பி.டி. பருத்தி 1997 ஆம் ஆண்டில் சீன அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது.[4]
2002 ஆம் ஆண்டில், மான்சாண்டோ மற்றும் மஹ்கோ ஆகியோரின் கூட்டு ஒப்பந்தத்திபடி பி.டி. பருத்தி கலப்பின இரகங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.[5]
2011 இல், இந்தியாவின் மிகப்பெருமளவில் ஜி எம் பருத்திப் பயிர்கள் 10.6 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்டன. உலகில் பரப்பளவில் இரண்டாவது பெரிய பகுதியாக, அமெரிக்காவில் ஜி எம் பருத்திப் பயிர் 4.0 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக சீனாவில் 3.9 மில்லியன் ஹெக்டேர் மற்றும் பாகிஸ்தானில் 2.6 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்டது.[6] 2014 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் பருத்தி உற்பத்தியில் 96% மரபணு மாற்றப்பட்ட பருத்தி இடம்வகித்தது.[7] இந்தியாவில் விளைந்த பருத்தியில் இது 95% ஆகும்.[8] மரபணு மாற்றப் பருத்தி உற்பத்தியில் 2014 இல் இந்தியா மிகப்பெரிய உற்பத்தியாளராக திகழ்ந்தது.
சாதாரண பருத்தியைவிட பி.டி பருத்தியில் பல நன்மைகள் உள்ளன. பி.டி பருத்தியின் முக்கிய நன்மைகள்:
பருத்தியானது சாறு உறுஞ்சும் பூச்சிகள்: அசுவினிப்பூச்சி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ மென்று திண்ணும் பூச்சிகள்: காய்ப்புழுக்கள், இலை திண்ணும் புழுக்கள் முதலிய பல்வேறு பூச்சியினங்களரல் பாதிக்கப்டுகிறன. இந்தியாவில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் 45% அளவுக்கு பருத்திக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. ஆகவே பூச்சிக்கொல்லி அளவைக் கட்டுப்படுத்த “ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை”, பூச்சிக்கொல்லி எதிர்ப்புத்திறன் பி.டி. பருத்தி தொழில்நுட்பமானது. காய்ப்புழுக்களை ஒழிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. மரபணு எதிர்ப்புத்திறமானது பூச்சிக்கட்டுப்பாடு மேலாண்மையில் முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, வெள்ளைஈ, முதலியவற்றைக் கட்டுப்படுத்த எதிர்ப்புத் திறன் கொண்ட கலப்பின் இரகம் கொண்டு இந்தியாவில் கட்டுப்படுத்தப்படுகிறது.
பி.டி.பருத்தியானது “ஹெலிக்கோவெர்பா சியா” மற்றும் “ஹெலியோதிஸ் வைரசன்ஸ்” முதலிய காய்ப்புழுக்களை மிக நன்றாக கட்டுப்படுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித தீமையும் இன்றி விளைச்சலும் அதிகரிக்கிறது. பி.டி.மரபணுவானது ஆரம்பகட்ட வளர்ச்சியிலேயே அதன் காய் உருவாகும்போதே அதிக வீரியத்தன்மையுடன் உள்ளது. 1/3 பங்கு அளவு தரமான நயமான நூலிழைகளை பயிரானது கொள்கிறது.
பி.டி.பருத்தி மற்றும் பி.டி.பருத்தி அல்லாத பருத்தி முதலியவற்றுடன் ஆராயும்போது காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் “பொருளாதார நிலையை” ஆராயும்போது பி.டி.பருத்தியானது நன்கு கட்டுப்படுகிறது. அதேபோல் பூச்சிக்கொல்லிகளுக்கான செலவு முதலியவற்றில் ஆராயும்போது குறைந்த அளவு செலவே பி.டி.பருத்தியினை பயிரிடுவதால் ஆகின்றது. இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதால், உலக அளவில் மக்களின் பாதுகாப்பு, பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் கேடுகள், சுற்றுச்சூழல் மாசுபாடு முதலியவற்றிலிருந்து பாதுகாப்பு அதேபோல் பூச்சிக் கொல்லிகளைக் குறைவக பயன்படுத்துவதால் வயலில் வேலை செய்வோர் மற்றும் அண்டை அயலாருக்குப் பாதுகாப்பாக உள்ளது.
பி டி பருத்தியானது நன்மை பயக்கும் பூச்சிகள் மற்றும் மண்ணில் காணப்படும் உயிரினங்களுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
பி.டி. பருத்தி சில வரையரைகளைக் கொண்டுள்ளது
மரபணு மாற்றப்படாத பருத்தி விதைகளை ஒப்பிடும்போது பி.டி. பருத்தி விதைகள் அதிக விலை கொண்டவையானவையாக உள்ளன.
பி.டி. மரபணு மாற்றப் பயிரில் உருவாக்கும் நச்சுத்தன்மையைக் குறைத்து 120 நாட்களுக்கு செயல்படுவதாக உள்ளது.
பி டி பருத்தியானது செடிப்பேன், செடிப் பூச்சி (plant bugs), பிழி பூச்சி (stink bugs) போன்ற பருத்தி பூச்சிகளுக்கு எதிராக செயலற்றதாக உள்ளது.
பி. டி. பருத்திப் பயிர் தொடக்கத்தில் பெரிய லாபத்தைக் கொடுத்தது. ஆனால், பி. டி. பருத்தி மழைப்பொழிவை நம்பியிருந்த பகுதிகளில் இழப்பை ஏற்படுத்தியது. நிரந்தர பாசன வசதி உள்ள பகுதிகளில் மட்டுமே, அது ஓரளவு லாபத்தைக் கொடுத்தது.[9]
மார்ச் 10, 1995 இந்திய அரசின் உயிர் தொழில்நுட்பத்துறையானது, 100 கிராம் அளவுள்ள மரபணு மாற்றப்பட்ட “மஹிகோ” விதையின் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியது. இந்த இரகத்தில் “பேசில்லஸ் துரின்சியன்சிஸ்” ன் “கிரை 1.ஏ.சி” எனும் மரபணு உள்ளது.
ஏப்ரல் 1998: மான்சான்ட்டோ- மஹிகோ இடையே ஒப்பந்தம். “மான்சான்ட்டோ” சிறிய சோதனை வயல் மூலம், பி.டி.பருத்திவிதை 100 கிராம் அளவுக்கு ஒரு சோதனை வயல் வீதம் அளித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியது.
ஜனவரி 1999: மரபணு மாற்றியமைக்கும் மறுபரிசீலனைக்குழுவானது, 40 இடங்களில் மேற்கொண்ட சோதனையில் மிகவும் திருப்தி அடைந்தது. ஏப்ரல் 12 அன்று நேரடியாக மஹிகோ 10 இடங்களில் சோதனையை மேற்கொண்டது.
2000-2002: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகமானது சோதனைக்காக பல்வேறு வகைகளில் அனைத்திந்திய ஒருங்கிணைந்த பருத்தி மேம்பாட்டு திட்டம் மூலமாக மத்திய மற்றும் தென் மண்டலங்களில் நடத்தின.
பிப்ரவரி 20,2002: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகமானது பி.டி. பருத்தியை பயிரிடுவதால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித கெடுதலும் இல்லை என ஆதாரங்களை சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அளித்தது. அதேபோல் மரபுப் பொறியியல் மற்றும் அனுமதி அளிக்கும் கழகமானது, பி.டி.பருத்தியை வர்த்தகரீதியாகப் பயிரி அனுமதி அளிக்க வேண்டி “சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அளித்தது”.
மார்ச் 25, 2002: வர்த்தகரீதியாகப் பயிரிட பி.டி.பருத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் மரபுப்பொறியியல் மற்றும் அனுமதி அளிக்கும் கழகத்தின் மூலம் “மஹிகோ” நிறுவனம் 2002ல் 29,307 ஹெக்டேராக இருந்தது. 2005ல் 12,50,833 ஹெக்டேராக உயர்ந்தது. 2006ல் 30,00,000 ஹெக்டேராக உயர்ந்தது.
இந்தியாவில் பி டி பருத்தி விதை ஏகபோகம் மற்றும் பருத்தி விளைவித்த விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதன் காரணமாக, இந்தியாவில், பி.டி. பருத்தி முரண்பாடுகளில் மூழ்கியுள்ளது.[10] இந்தியாவில் பி.டி. பருத்தி அறிமுகம் மற்றும் விவசாயிகள் தற்கொலைகளில் அதிகரிப்பு ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பு பற்றி பிற ஆய்வுகளில்,[11] பி டி பருத்தி அறிமுகமானபிறகு தற்கொலைகள் குறைந்துள்ளதாக கூறுகின்றன என்கிறது.[12] இந்தியாவில் பருத்தி உற்பத்தியில் பி. டி பருத்தி 93% ஆக அதிகரித்துள்ளது.[13]