பிகானேர் இராச்சியம் (Bikaner State) இந்தியாவின் தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் வடக்கில் அமைந்தது. 1465ல் நிறுவப்பட்ட பிகானேர் இராச்சியம் 60,391 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்தது. பிரித்தானிய இந்திய ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. 1947l இந்தியப் பிரிவினையின் போது, 7 ஆகஸ்டு 1947ல் பிகானேர் இராச்சியம், இந்தியாவுடன் இணைந்தது. 1465ல் நிறுவப்பட்ட பிகானேர் இராச்சியத்தின் தலைநகரம் பிகானேர் நகரம் ஆகும்.
இராசபுத்திரர்களின் ரத்தோர் வம்சத்தினரால் 1495ல் நிறுவப்பட்ட பிகானேர் இராச்சியம், 9 மார்ச் 1818ல் பிரித்தானிய இந்தியா ஆட்சியின் கீழ் சுதேச சமஸ்தானமாக விளங்கியது.[1]பிகானோர் இராச்சியத்தை, 7 ஆகஸ்டு 1947 அன்று, இந்தியாவுடன் இணைக்கும் உடன்படிக்கையில், பிகானோர் மன்னர் கையொப்பமிட்டார். [2]
Tod, James. Annals and Antiquities of Rajasthan, Volume II (With a Preface by Douglas Sladen). Oriental Books Reprint Corporation. 54, Jhansi Road, New Delhi-1100055.