பிகாரி தாக்கூர் (Bhikhari Thakur) (18 டிசம்பர் 1887-10 ஜூலை 1971) ஒரு இந்திய போச்புரி மொழிக் கவிஞரும், நாடக ஆசிரியரும், பாடலாசிரியரும், நடிகரும், நாட்டுப்புற நடனக் கலைஞரும், நாட்டுப்புறப் பாடகரும் மற்றும் சமூக ஆர்வலரும் ஆவார். இவர் போச்புரி மொழியின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகவும், பூர்வாஞ்சல் மற்றும் பீகாரின் மிகவும் பிரபலமான நாட்டுப்புற எழுத்தாளராகவும் பரவலாகக் கருதப்படுகிறார்.[1][2][3][4][5][6][7] தாக்கூர் பெரும்பாலும் “போச்புரியின் சேக்சுபியர்” என்று “ராவ் பகதூர்” என்று அழைக்கப்படுகிறார்.[8] இவரது படைப்புகளில் பனிரெண்டு நாடகங்கள், தனி பாத்திரத்தின் உரையாடல், கவிதைகள் மற்றும் பஜனைகள் ஆகியவை அடங்கும், இவை அனைத்தும் புத்தகங்களில் அச்சிடப்பட்டன. பிடேசியா, கபர்கிச்சோர், பேட்டி பெச்வா மற்றும் பாய் பிரோத் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் அடங்கும். கபர்கிச்சோர் பெரும்பாலும் பெர்தோல்ட் பிரெக்ட்டின்தி காகசியன் சாக் சர்க்கிள் என்ற நாடகத்துடன் ஒப்பிடப்படுகிறது.[9] நாச் பாணி நாட்டுப்புற நாடகப் பாரம்பரியத்தின் தந்தை என்று தாக்கூர் அறியப்படுகிறார்.[10] பெண் வேடங்களில் முதன்முதலில் நடித்த ஆண் நடிகர்களில் இவரும் ஒருவர்.[11]
தாக்கூரின் படைப்பில் ஒடுக்குமுறை, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான கருத்துகள், சாதிவாத மற்றும் ஆணாதிக்க முறை போன்றவைகளுக்கு மறைமுக எதிர்ப்பு இருந்தது. இடப்பெயர்வு, வறுமை, பொருந்தாத திருமணங்கள் ஆகியவையும் இவர் எழுப்பிய முக்கிய பிரச்சினைகளாகும்.[12][13]
சமூகத்தின் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் இவரது நாடகத்திற்காக பிகாரி தாக்கூர் மிகுந்த பாராட்டைப் பெற்றார். மக்கள் இவரை ராய்பகதூர் மற்றும் போச்புரியின் சேக்சுபியர் போன்ற பட்டங்களுடன் அழைத்தனர்.[14] 1944 ஆம் ஆண்டில், பீகார் அரசு இவருக்கு ராவ் பகதூர் என்ற பட்டத்தை வழங்கியது. மேலும் இவருக்கு செப்பு கேடயமும் வழங்கப்பட்டது[15] அசாமைச் சேர்ந்த புகழ்பெற்ற போச்புரி நாட்டுப்புற பாடகியான கல்பனா படோவரி, தாக்கூரின் பாடல்களை தி லெகசி ஆஃப் பிகாரி தாக்கூர் என்ற இசைத் தொகுப்பில் தொகுத்துள்ளார்.[16]
பிகாரி தாக்கூர், கீழ் வர்க்கத்தினரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் பல சாதி மற்றும் வர்க்கங்களால் எதிர்ப்புக்கு ஆளானர்.[17]
Maheshwaracharya (1978), Bhikhari: Bhojpuri ke Lok kalakar bhakt Bhikhari Thakur ki Samast rachnaon ka vishleshana [Bhikhari: A critical study of all writings of Bhojpuri Folk-Dramatist and Devotee Bhikhari], Lok Kalakar Bhikhari Thakur Aashram
Dwiwedi, B.P. (2000), Bhikhari Thakur: Bhojpuri ke Bharatendu, Aashu Prakashan
Rai, D.N. (2004), Lok Kalakar Bhikhari Thakur-Iyadan ke khoh se (in Bhojpuri), Shree Madhav Press, Chhapra
Singh, Dhananjay (2008), Bhojpuri Pravasi Shramikon ki Sanskriti aur Bhikhari Thakur ka Sahitya (in Hindi), NLI Research studies series