பிகுதன் கோவிந்த்பாய் காத்வி | |
---|---|
பிறப்பு | 19 செப்டம்பர் 1948 குசராத், இந்தியா |
பணி | நாட்டுப்புற பாடகர் பாடலாசிரியர் |
அறியப்படுவது | குஜராத்தின் இசை |
வாழ்க்கைத் துணை | கஜ்ரபா |
பிள்ளைகள் | ஒரு மகன் |
விருதுகள் | பத்மசிறீ சங்கீத நாடக அகாதமி விருது குஜராத் கவுரவ் விருது ஸ்ரீ துலா பய காக் விருது |
கையொப்பம் | ![]() |
பிகுதன் கோவிந்த்பாய் காத்வி (பிறப்பு 1948) ஒரு இந்திய நாட்டுப்புற பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார், அவர் குஜராத்தின் இசையில் கதை பாடும் பாரம்பரியமான தயரோ-வின் முன்னோடியாக அறியப்படுகிறார்.[1] குஜராத் அரசின் '''குஜராத் கவுரவ் விருது''' மற்றும் சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர்.[2] 2016 ஆம் ஆண்டில், குஜராத் நாட்டுப்புற இசைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசு அவருக்கு நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமைப்படுத்தியது.[3]
பிகுதன் காத்வி 1948 ஆண்டு செப்டம்பர் மாதம் 19 அன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள மனேக்வாடா என்ற கிராமத்தில் பிறந்தார்.[4][5] பத்து வயதிலேயே பாடத் தொடங்கிய இவர், இடைநிலைப் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, கிட்டத்தட்ட அவரது இருபதாவது வயதில் நாட்டுப்புற பாடகராக அறிமுகமானார் [6] அவரது வாழ்க்கையின் ஆரம்பத்தில் படித்த ஜாவர்சந்த் மேகானி மற்றும் துலா பயா காக் ஆகியோரின் படைப்புகளே, நாட்டுப்புற பாடல்களை எழுதுவதற்கு காத்விக்கு ஊக்கமளித்ததாகக் கூறப்படுகிறது, மேலும் அவர் குஜராத்தின் நாட்டுப்புற இசை பாரம்பரியமான தயரோ வகை இசையில் கவனம் செலுத்தினார், அங்கு கலைஞர் கதைகளை பாடல்களாகப் பாடுகிறார். அவர் அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் மற்றும் இந்தோனேஷியா போன்ற பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் மற்றும் 350 க்கும் மேற்பட்ட ஒலி இசைத்துணுக்குகளை வெளியிட்டுள்ளார், இதில் பதானு மாகன் மற்றும் கந்தனினு காமிர் போன்ற பிரபலமான பாடல்களும் அடங்கும்.[6]
2009 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமி அவருக்கு அகாடமி புரஸ்கார் விருதை வழங்குவதற்கு முன், காத்வி குஜராத் அரசாங்கத்தின் குஜராத் கவுரவ் விருதைப் பெற்றுள்ளார். இந்திய அரசு 2016 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கான குடியரசு தின மரியாதை பட்டியலில் அவரை சேர்த்து பெருமைப்படுத்தியது.[7] அவர் ஸ்ரீ துலா பய காக் விருதையும் பெற்றுள்ளார்.[8] அவர் கஜ்ரபாவை மணந்தார், அவர்களுக்கு பாரத்பாய் என்ற மகன் உள்ளார்.[9] குடும்பமாக குஜராத்தில் உள்ள ஜூனாகத்தில் வசித்து வருகிறது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)