பிக் வானொலி அல்லது பிக் எப்.எம் (English: Big FM) என்பது இந்தியாவில் ஒலி பரப்பப்படும் தனியார் வானொலி ஆகும். இது இந்தியத் தொழில் அதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமானதாகும். இதன் அலைவரிசை 92.7 MHz ஆகும்.
பிக் வானொலி 45 நகரங்களில் ஒலிபரப்பப்படுகிறது. இந்தியாவில் ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் இருந்து ஒலி பரப்பப்படும் ஒரே தனியார் வானொலி நிலையம் பிக் வானொலி ஆகும்.[1] ஜூலை 2008 முதல் சிங்கப்பூரிலும் ஒலிபரப்பப்படுகிறது.