பிக்கான் லால் ஆத்ரேயா | |
---|---|
பிறப்பு | 1897 பந்தர் ஜுத்தா கிராமம் உத்தரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 1967 (அகவை 69–70) |
மற்ற பெயர்கள் | எழுத்தாளர் அறிஞர் கல்வியாளர் |
அறியப்படுவது | இந்திய மெய்யியல் பற்றிய எழுத்து |
விருதுகள் | பத்ம பூசண் |
பிகான் லால் ஆத்ரேயா (Bhikhan Lal Atreya) (1897-1967) ஓர் இந்திய எழுத்தாளரும் அறிஞரும் ஆவார். இவர், இந்து வேதமான யோகவாசிஷ்டத்தைப் பற்றிய எழுத்துக்களுக்கு பெயர் பெற்றவர்.[1] பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பேராசிரியராக இருந்த இவர், ஆன்மிக உளவியல், ஆன்மீகவாதம் குறித்த கல்வி ஆராய்ச்சியினை மேற்கொண்டர்.[2] யோகவாசிஷ்டாவும் அதன் தத்துவமும், [3] யோகவாசிஷ்டத்தின் சாராம்சம் [4] ,ஆன்மீக உளவியலுக்கு ஒரு அறிமுகம் [5] ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க புத்தகங்கள் ஆகும். இலக்கியம் மற்றும் கல்விக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 1957ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை கௌரவமான பத்ம பூசண் விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[6]