பிக்காஸ் ஐ குட் நாட் ஸ்டாப் பாஃர் டெத் (Because I could not stop for Death) ("ஏனென்றால் என்னால் மரணத்தை நிறுத்த முடியவில்லை") என்னும் கவிதை எமிலி டிக்கின்சனால் எழுதப்பட்டது. 1890 இல் கவிதைகள் தொகுதி 1-இன் தொடர்ச்சியான பதிப்புகள் வெளியிடப்பட்டது.[1]1955 ஆம் ஆண்டு தோமஸ் எச். ஜான்சனின் மாறுபட்ட பதிப்பின்படி இந்த கவிதைகளின் எண்ணிக்கை 712 ஆகும்.[2]
இந்த கவிதை 1890 ஆம் ஆண்டில் "கவிதைகள்" என்னும் தெகுப்பில் வெளியிடப்பட்டது. இதில் மரணம் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. மரணம் ஒரு தேரோட்டியாக எமிலி டிக்கின்சனை அழைத்துச் செல்கிறது.[3] அந்தத் தேர் முதலில் ஒரு பள்ளியை கடக்கிறது. பின்னர் சூரியன் மறையும் இடம் வந்தடைகிறது. கடைசியாக கல்லறைத் தோட்டத்தில் தேர் நிற்கிறது.
1936 இல் ஆலன் டேட் கூறுகையில் “டிக்கின்சனின் மனதின் விசேஷ தரத்தை இந்தக் கவிதை விளக்குகிறது” என்கிறார்.[4] இந்தக் கவிதை ஆங்கில மொழியில் மிகப் பிரபலமானதாக இருக்கிறது.[5]