பண்டிட் பிஷன் நாராயண் தார் (Pandit Bishan Narayan Dar) (1864-1916) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் 1911 ஆம் ஆண்டில் ஒரு முறை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
தார் லக்னோவைச் சேர்ந்த ஒரு முக்கிய காஷ்மீர் பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மாமா பண்டிட் சம்பு நாத் கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி ஆவார். தார் லாகூரில் உள்ள சர்ச் மிஷன் உயர்நிலைப் பள்ளி மற்றும் கேனிங் கல்லூரியில் படித்தார். தார் இங்கிலாந்து சென்று, அங்கு அவர் ஒரு வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். இந்தியா திரும்பிய பின்னர், 1887ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். அவர் 1911 ஆம் ஆண்டில் ஐக்கிய மாகாண மாநாட்டின் தலைவராகவும், அதே ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் இருந்தார். 1914 ஆம் ஆண்டில், அவர் ஐக்கிய மாகாணங்களிலிருந்து இம்பீரியல் சட்டமன்றக் குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]