![]() | |
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
இருபிசுமத் முச்சல்பேட்டு | |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
7787-68-0 | |
ChemSpider | 171500 |
EC number | 232-129-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 198144 |
| |
UNII | 68FE11533K |
பண்புகள் | |
Bi2(SO4)3 | |
வாய்ப்பாட்டு எடை | 706.15 கி/மோல் |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 5.31 கி/செ/மீ3[1] |
உருகுநிலை | 465 °C (869 °F; 738 K)[2] (சிதைவடையும்) |
நீராற்பகுப்பு அடையும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைசரிவச்சு |
புறவெளித் தொகுதி | P21/n |
Lattice constant | a = 13.08 Å, b = 4.73 Å, c = 14.52 Å |
படிகக்கூடு மாறிலி
|
|
தீங்குகள் | |
GHS pictograms | ![]() |
GHS signal word | எச்சரிக்கை |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பிசுமத்(III) நைட்ரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | ஆண்டிமனி சல்பேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிசுமத்(III) சல்பேட்டு (Bismuth(III) sulfate) என்பது Bi2(SO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் நீருறிஞ்சும் தன்மையுடன் இது காணப்படுகிறது. 465 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது பிசுமத்(III) ஆக்சிசல்பேட்டாக சிதைவடைகிறது. ஆண்டிமனி சல்பேட்டு சேர்மத்தை ஒத்த கட்டமைப்பைப் பிசுமத்(III) சல்பேட்டு பெற்றுள்ளது.[1]
பிசுமத்(III) நைட்ரேட்டுடன் கந்தக அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பிசுமத்(III) சல்பேட்டு உருவாகும். பொதுவாக இம்முறையிலேயே பிசுமத்(III) சல்பேட்டு தயாரிக்கப்படுகிறது.
இலித்தியம் பிசுமத்தேட்டு(III) சேர்மத்துடன் கந்தக அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்டினால் பிசுமத்(III) சல்பேட்டின் மற்றொரு பல்லுருவம் உருவாகும்[3]
பிசுமத்(III) சல்பேட்டு 465 °செல்சியசு வெப்பநிலையில் Bi2O(SO4)2 ஆக சிதைகிறது. தொடர்ந்து சூடுபடுத்தினால், இது பல்வேறு பிசுமத் ஆக்சிசல்பேட்டுகளாக சிதைவடைகிறது. 950 °செல்சியசு வெப்பநிலையில் இது பிசுமத்(III) ஆக்சைடாக சிதைகிறது. பிசுமத்(III) சல்பேட்டு தண்ணீரில் நீராற்பகுப்பு அடைகிறது.[1][2]