பிசுமத் ஐதராக்சைடு (Bismuth hydroxide) என்பது Bi(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தின் பண்புகள் முழுவதுமாக வரையறை செய்யப்படவில்லை. ஒரு பிசுமத் உப்புக் கரைசலுடன் காரத்தைச் சேர்ப்பதால் வெண்மை நிறச் சீவல்களாக பிசுமத் ஆக்சைடு ஐதரேட்டு[1]அல்லது பிசுமத் ஐதரேற்று உண்டாகிறது. செரிமான மண்டல நோய்கள் [2]சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பாதுகாப்புப் பொருளில் பிசுமத் பாலாகப்[3] பயனாகிறது. நீரிய அமோனியா பிசுமத்(III) அயனியுடன் வினைபுரிந்து வெண்மைநிற பிசுமத் ஐதராக்சைடு வீழ்படிவாகிறது[4].