பிசுவபூசண் அரிச்சந்தன் | |
---|---|
23வது ஆந்திரப் பிரதேச ஆளுஞர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 ஜூலை 2019 | |
முன்னையவர் | ஈ. சீ. இ. நரசிம்மன் |
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1997–2009 | |
தொகுதி | புவனேசுவரம் மத்திய சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 1990–1995 | |
தொகுதி | சில்க்கா சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 1977–1980 | |
தொகுதி | சில்க்கா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 ஆகத்து 1934 |
குடியுரிமை | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை |
|
தொழில் | வேந்தர்-சிறீ பி. அரிச்சந்தன் கிருஷ்ணா பல்கலைக்கழகம் |
உடைமைத்திரட்டு | சட்ட்ம், வருவாய், மீன்வள அமைச்சர் ஒரிசா அரசு (2004–2009) |
விருதுகள் | கலிங்கா ரத்னா சமான் 2021 |
பிசுவபூசண் அரிச்சந்தன் (Biswabhusan Harichandan)(பிறப்பு 3 ஆகஸ்ட் 1934)[1] ஆந்திரப் பிரதேசத்தின் 23வது மற்றும் தற்போதைய ஆளுநராகப் பணியாற்றும் இந்திய அரசியல்வாதி ஆவார்.
அரிச்சந்தன் பாரதிய ஜனசங்கத்தில் 1971-ல் சேர்ந்தார். பாரதிய ஜனசங்கத்தில் தேசிய செயல் உறுப்பினர் மற்றும் ஒரிசா மாநில பொதுச்செயலாளராக ஜனதா கட்சி 1977-ல் தோன்றும் வரை பொறுப்பு வகித்தார்.[2] நெருக்கடி நிலைக் காலத்தில் இவர், மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் 1980-ல் பாரதிய ஜனதா கட்சி உருவான பிறகு , இவர் ஜனதா தளத்துடன் கைகோர்ப்பதற்கு முன்பு 1988 வரை மாநிலத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1996-ல் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
அரிசந்தன் ஒடிசா மாநில சட்டப் பேரவைக்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். சில்க்கா ஏரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1977ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] பின்னர் 1990-ல் ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஆட்சிக்கு வந்தார். 1997ஆம் ஆண்டு புவனேசுவரம் மத்திய தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தொடர்ந்து மூன்று முறை இதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியில் தொடர்ந்தார். 2004-ல் பிஜுஜனதா தளம்-பாஜக தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்தார்.
ஜூலை 2019-ல், இந்தியக் குடியரசுத் தலைவர் ஆந்திரா மற்றும் தெலங்காணா ஆளுநர்களை மாற்றியமைத்தார். அரிச்சந்திரன் ஆந்திராவின் 23வது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
17 நவம்பர் 2021 அன்று, அரிசந்தனுக்கு கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது.[4]
அரிசந்தன் 2021-ல் கலிங்க ரத்னா விருது பெற்றார்.[5]
அரிசந்தன் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் சில: மருபதாசு, மகாசங்கராமர் மகாநாயக், பக்சி ஜகபந்து , பைகா கலகம் மற்றும் இவரது சுயசரிதை சங்கர்சா சரினாகின்.