Bijon Bhattacharya | |
---|---|
நபான்னா எனும் நாடகத்தில் பிஜோன் பட்டாச்சார்யா | |
பிறப்பு | [1] பரித்பூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது வங்காளதேசம்) | 17 சூலை 1906
இறப்பு | 19 சனவரி 1978 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 71)
தேசியம் | இந்தியா |
பணி | மேடை நடிகர் |
வாழ்க்கைத் துணை | மகாசுவேதா தேவி (1947–1962) |
பிள்ளைகள் | நபருண் பட்டாச்சார்யா |
பிஜோன் பட்டாச்சார்யா (Bijon Bhattacharya) (ஜூலை 17,1906-ஜனவரி 19,1978) மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு இந்திய நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார்.[2] இவர் ஒரு புகழ்பெற்ற நாடக ஆசிரியரும் ஆவார்.
பட்டாச்சார்யா 1906 ஆம் ஆண்டில் பரித்பூரில் (இப்போது வங்காளதேசம்) ஒரு இந்து, வங்காளி பிராமணக் குடும்பத்தில் ஓர் ஏழை விவசாயிக்குப் பிறந்தார்.[3] இவர் இந்திய மக்கள் நாடக சங்க உறுப்பினராக ஆனார்.
பிஜோன் பட்டாச்சார்யா ஞானபீட விருது பெற்ற வங்காள எழுத்தாளர் மகாசுவேதா தேவியை மணந்தார். இவர்களின் ஒரே மகன் நபருண் பட்டாச்சார்யா, வங்காள எழுத்தாளராக இருந்தார்.