நில டயாக் | |
---|---|
![]() பூர்வீக டயாக் தலைவர் | |
மொத்த மக்கள்தொகை | |
205,900 (2014)[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() ![]() | |
198,473 (2010)[2] | |
மொழி(கள்) | |
பிடாயூ மொழிகள்: புக்கார் சாடோங், சாகோய், பியாத்தா, மலாய் மொழி | |
சமயங்கள் | |
கிறிஸ்தவம், இஸ்லாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
பெக்காத்தி, பின்யாடு, சொங்காங், ரிபுன், செலாக்கோ மக்கள், லாரா, சங்காவ், சாரா, திரிங்குசு, செமண்டாங், ஆகே |
பிடாயூ மக்கள் (மலாய்: Orang Bidayuh; ஆங்கிலம்: Bidayuh People;) மக்கள்; மலேசியா, சரவாக் மாநிலம்; இந்தோனேசியா, மேற்கு கலிமந்தான் பகுதிகளைச் சேர்ந்த பூர்வீகக் குழுவினராகும். சரவாக் மாநிலத்தில் தொடக்கக் காலங்களில் குடியேறிய பூர்வீகக் குழுவினர்களில் இந்தக் குழுவினரும் ஒரு குழுவினர்.
மலேசிய மாநிலமான சரவாக்கில் உள்ள கூச்சிங், செரியான் நகரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களில் அதிகமாய் வாழ்கின்றனர். அதே சமயத்தில் இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் மாநிலத்தின் வடக்கு சங்காவ் துணை மாநிலத்திலும் (Sanggau Regency) மிகுதியாய் வாழ்கின்றனர்.
சரவாக்கைப் பொருத்த வரையில், கூச்சிங் பெருநகர்ப் பகுதியிலிருந்து (Greater Kuching) 40 கி.மீ. தொலைவில் உள்ள செரியான் பிரிவிற்குள் பெரும்பாலான பிடாயூ மக்கள் வசிக்கின்றனர்.
இபான் பூர்வீக மக்களுக்கு அடுத்த நிலையில், சரவாக் மாநிலத்தில் இரண்டாவது பெரிய டயாக் இனக் குழுவினர் பிடாயூ மக்கள் ஆகும்.
இவர்கள் வாழும் பகுதி முக்கியமாக சரவாக் ஆற்றின் படுகையில் உள்ளது. இருப்பினும் மலைப்பாங்கான காடுகளிலும் இவர்களின் குடியேற்றங்கள் உள்ளன.
இன்றைய நிலையில், கிட்டத்தட்ட அனைத்துப் பிடாயூ மக்களின் பாரம்பரிய நீளவீடுகளும் (longhouses) தனிப்பட்ட வீடுகளாக மாற்றப்பட்டு விட்டன. பிடாயூ மக்களும் நவீன மாற்றங்களுக்குத் தங்களின் பாரம்பரியத்தைச் சன்னம் சன்னமாய் விட்டுக் கொடுத்து வருகின்றனர்.
பிடாயூ மக்களால் ஏறக்குறைய 25 கிளைமொழிகள் பேசப் படுகின்றன.[3] கிளைமொழிகளின் பேச்சுவழக்குகள் ஒன்றுக்கொன்று தொடர்புகள் இல்லாதவை. தவிர ஆங்கிலம் அல்லது மலாய் மொழிகள் பெரும்பாலும் பொதுவான மொழிகளாகப் பயன்படுத்தப் படுகின்றன.[4]
பிடாயூ மக்கள் பாரம்பரியமாகவே ஆன்மிகவாதிகள்.[5][6] 1848-ஆம் தொடங்கி சரவாக்கில் வெள்ளை இராஜா வம்சாவழியினரின் ஆளுமை. இவர்களின் காலத்தில் கிறிஸ்தவ பரப்புரையாளர்களின் வருகை. அதன் விளைவாக பிடாயூ மக்களிடம் கல்வியறிவு புகட்டப்பட்டது. இவர்களின் வாழ்வியலிலில் நவீன மருத்துவமும் பற்றிக் கொண்டது.
இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இப்போது கிறிஸ்தவ ரோமன் கத்தோலிக்கர்கள். கிட்டத்தட்ட 70% பிடாயூ மக்கள் கிறிஸ்தவத்திற்கு மாறி விட்டனர். தங்களின் பாரம்பரிய பெயர்களை ஆங்கிலப் பெயர்களாக மாற்றிக் கொண்டனர்.[5]
அண்மைய காலங்களில் பெரும்பாலான பிடாயூ இளைஞர்கள் தங்களின் பழங்குடி பாரம்பரிய சடங்குகளைக் கடைப்பிடிப்பதைத் தவர்த்து வருகின்றனர். பிடாயூ பழங்குடி மக்கள், மற்ற ஒரு பழங்குடி இனத்தவரான மெலனாவ் மக்களின் நெருங்கிய உறவினர்களும் ஆகும்.
பிடாயூ மக்கள் இறந்தவர்களின் உடலைத் மரங்களில் தொங்கவிட்டு அழுக விட்டுவிடும் ஒரு தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்டிருந்தனர். இறந்தவர்களின் நினைவுக்காக அவர்களின் எலும்புக்கூடுகள் மரங்களில் வைக்கப்படும். இந்தப் பாரம்பரியம் இப்போது அரிதாகவே நடைமுறையில் உள்ளது.[4]