பித்ருபக்த அரசு (Pitrbhakta (IAST: Pitṛbhakta) என்பது கிழக்கு இந்தியாவின் கலிங்கப் பகுதியை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஆண்ட அரச மரபு ஆகும். பித்தருபக்த அரசின் எல்லைக்குள் தற்கால வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா ஆகியவை அடங்கி இருந்தன. இவர்களை ஒருவேளை மாத்தறைப் அரசை வீழ்திவிட்டு ஆட்சிக்கு வந்திருக்கவேண்டும் எனக் கருதப்படுகிறது.
இந்த அரசமரபின் உண்மையான பெயர் இது அல்ல. இந்த அரசர்கள் தங்கள் கல்வெட்டுகளிலில் தங்களை பித்ருபக்தர் (தங்களை தந்தையின் பக்தர்) என அழைத்துக்கொண்டனர், தற்கால அறிஞர்கள் இந்தச் சொல்லை இந்த அரச மரபின் பெயராக வைத்தனர்.[1]
உமாவர்மன் இந்த மரபின் முதல் அரசராக அறியப்படுகிறார். கல்வெட்டு சான்றுகள் இவர் மத்தறை மன்னர் அனந்தசக்திவர்மனை தூக்கி எறிந்துவிட்டு ஆட்சிக்கு வந்ததாக குறிப்பிடுகின்றன.[2] அனந்தசக்திவர்மனிடம் தேசக்சபடலதீக்ஷதா என்னும் அரச பதவியில் இருந்த மாத்ரவரா பிறகு உமாவர்மனின் ஆட்சிக்காலத்திலும் அதே பதவியை வகித்தார், என உமாவர்மன் சிங்கபுரத்தில் அளித்த இரண்டு செப்பேடுகள் வழியாக அறிய இயலுகிறது. இந்த சாசணங்கள் உமாவர்மனின் 30 ஆவது மற்றும் 40 ஆவது ஆட்சியாண்டுகளில் வெளியிடப்பட்டன. இந்த இரண்டு சாசணங்களிலும் உமாவர்மன் கலிங்காதிபதி என அழைக்கப்படுகிறார்.[3] இதனால் அனந்தசக்திவர்மன் மற்றும் உமாவரமன் ஆகிய இருவருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் ஒரு போட்டி இருந்ததாக தெரிகிறது.[4]
உமாவர்மனின் இறுதியாக அறியப்பட்ட செப்பேட்டில் (இவரது 40 ஆம் ஆட்சியாண்டு) இவரது மகனான வசுசேனராஜா குறிப்பிடப்படுகிறார். இந்த இளவரசனின் பெயர் வேறு எந்த மூலத்திலும் குறிப்பிடப்பட்டவில்லை. கல்வெட்டு கலிங்கா என்ற பெயரிடப்பட்ட, ஒரு புதிய அக்ரகாரத்தை உருவாக்குவது குறித்தது, இந்த கிராமம் வசிஷ்ட கோத்ரத்தைச் சேர்ந்த அந்தணர்களுக்கு வழங்கப்பட்ட உருவாக்கப்பட்டது.[3]
உமாவர்மணின் சாசணங்கள் கண்டறியப்பட்ட இடங்கள், மற்றும் அதில் குறிப்பிடப்பட்ட இடங்கள் போன்ற அனைத்தும் தற்கால கஞ்சாம் (தெற்குப் பகுதி), சிறீகாகுளம், விசாகப்பட்டணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளாகும்.[4]
அடுத்து அறியப்பட்ட பித்ருபக்த மன்னன் நந்தபிரபாஞ்சனவர்மன் ஆவார். இவர் சரபள்ளிகா, வர்தமானபுரா, சிம்மபுரம் ஆகிய இடங்களில் இருந்து செப்பேடுகள் வழியாக மாணியங்கள் அளித்துள்ளார். கண்டறியப்பட்ட இவரது மூன்று சாசணங்களிலும் இவரை சகல-கலிங்காதிபதி ("முழு கலிங்கத்துக்கும் மன்னர்") என குறிப்பிடப்பட்டுள்ளது.[4] இந்தப் பட்டத்தை பயன்படுத்திய வேறு நபர் என்றால் மாத்தறை மன்னர் பிரபாஞ்சனவர்மன் ஆவார். இதன் காரணமாக, சில அறிஞர்கள் இவர்கள் சமகால ஆட்சியாளர்களாக இருக்க வேண்டும் என்று கருததுகின்றனர். எனினும், வரலாற்று சான்றுகள் நந்தபிரபாஞ்சனவர்மன் பின்வந்த ஒரு ஆட்சியாளர் என்று கூறுகின்றன.[5]
நந்தபிரபாஞ்சனவர்மன் சிம்மபுரத்திலிருந்து வெளியிட்ட ரகோலு செப்பேட்டானது, ரகோலு கிராமத்தில் (தற்கால ரகோலகா கிராமம்) ஒரு நிலமாணியம் அளித்தது தொடற்பானது ஆகும். இதே கிராமத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட அக்ரகாரத்தை உருவாக்கியது தொடற்பான மாத்தறை மன்னர் சத்திவர்மனின் செப்பேடு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பகுதியை மத்தறை மரபினரிடமிருந்து பித்ருபக்தர்கள் கைபற்றியதையும் செப்பேடு கூறுகிறது.[5]
அடுத்து தெரியவருகின்ற பித்ருபக்த ஆட்சியாளர் சந்திரவர்மன் ஆவார். இவர் கலிங்காதிபதி என்ற பட்டம் பூண்டிருந்தார். இவர் விஷ்ணுவின் பக்தராக இருந்தார்.[5] மாத்ரவராவின் மன்னான ருத்ரதத்தா தேசக்சபடலதீக்ஷதா அரச பதவியில் தன் தந்தைக்குப் பின் இருந்ததார்.[6]
விஷக்தவர்மன் என்ற பெயரிலான ஒரே ஒரு செப்பேடு கண்டறியப்பட்டுள்ளது, இவர் பரலக்கேமுடி பகுதியில் (தற்கால கஜபதி மாவட்டம்) 5 ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்தார். இவரது கொரோஷந்தா சாசணம் கலையிலும், சொல் நடையிலும் பித்ருபக்த சாசணங்களை நெருக்கமாக ஒத்துள்ளது. குறிப்பாக, சாசணத்தில் அவரது தந்தையின் பாதத்தை பணியும் ஒரு பக்தராக அவரை விவரிக்கிறது. இதைக் கொண்டு பார்க்கும்போது இவர் பித்ருபக்தர்களின் காலத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது அவர்களின் வீழ்ச்சிக்குப்பின்னர் சிம்ம்புரத்தில் உடனடியாக ஆட்சிக்கு வந்தவராக இருக்கலாம் என் கருதப்படுகிறது. இந்த சாசணம் சிறீபுரத்தில் இருந்து வெளியிடப்பட்டது, இந்த சிறீபுரம் பலவாறு அடையாளப்படுத்தப்படுகிறது இந்த ஊர் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாத்தியா சிறீபுரம் கிராமாமக அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றொரு கருத்தாக இந்த சாசணம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியான கொரோஷண்ந்தா பகுதிக்கு அருகில் உள்ள பாத்திய சிறீபுரம் என்ற ஊர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. விஷக்தவர்மன் தன்னை கலிங்காதிபதி என அழைத்துக் கொள்ளவில்லை. பத்தியா சிறீபுரத்தின் மூலமாக இவரது ஆட்சிப் பரப்பு இன்றைய கஞ்சம் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் மட்டுமே இருந்தது என்று கருதப்படுகிறது.[6]
கொரோஷந்த சாசணனமானது பாஞ்சாளி (நிர்வாகப் பிரிவு) யைச் சேர்ந்த தம்போயக்கா என்னும் கிராமத்தில் அளித்த மாணியம் தொடற்பானது. தம்போயக்கா கிராமமானது தற்கால தம்பா கிராமமாக அடையாளம் காணப்பட்டுள்ளது, இதனுடன் கொரோஷந்த என்னும் பகுதியானது தற்கால கொரந்தா என அடையாளம் காணப்பட்டுள்ளது..[7]
ஒரு கோட்பாட்டின்படி விசாகப்பட்டினம் ஊரின் பெயர் ஒரு மன்னரின் பெயரிலிருந்து வந்தது எனப்படுகிறது, இந்த மன்னரே இங்குள்ள விசாகவாமினி கோயிலைக் கட்டியவர் எனப்படுகிறது. எனினும் இந்த யூகத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை.[7]
விசாகவர்மன் கீழைக் கங்கர்களால் ஆட்சிக் கட்டிலில் இருந்து ஆறாம் நூற்றாண்டில் அகற்றப்பட்டு அவர்களின் ஆட்சியமைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.[7]
பின்வரும் குடும்ப மரபினர்கள் அறியவருகிறார்கள்:[8]
இந்த ஆட்சியாளர்கள் இடையே சரியான உறவு கேள்விக்குறியாக உள்ளது.[6]