பிந்தாங்கூர் ஆறு Bintangor River Sungai Bintangor | |
---|---|
பிந்தாங்கூர் ஆற்றின் அழகிய தோற்றம் | |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | ராஜாங் ஆறு |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | தென்சீனக் கடல் |
பிந்தாங்கூர் ஆறு (மலாய்: Sungai Bintangor; ஆங்கிலம்: Bintangor River); மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு ஆகும். சரிக்கே பிரிவு, மெராடோங் மாவட்டத்தின் பிந்தாங்கூர் நகரப் பகுதியில் இந்த ஆறு ஊடுருவிச் செல்வதால் இந்த ஆற்றுக்கும் பிந்தாங்கூர் நகரத்தின் பெயரும் வைக்கப்பட்டது.[1][2]
1970 - 1990-களில், சரிக்கே நகரம், சிபு நகரம்; ஆகிய இரு நகரங்களையும் இணைக்கும் விரைவு படகுச் சேவையின் மையமாக பிந்தாங்கூர் நகரம் விளங்கியது. அந்தக் கட்டத்தில், பிந்தாங்கூர் நகரத்திற்கு பிந்தாங்கூர் ஆறு முக்கியமான நீர்வழிப்பாதையாகவும் இருந்தது.
முன்பு இந்த ஆறு, மாசுபாடு சிக்கல்களில் சிக்கிக் கொண்டது. ஆனால் அண்மைய ஆண்டுகளில் மாசுபாடு நிலைமையை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஓரளவிற்கு நிவர்த்தி செய்து விட்டார்கள்.[3]
1900-களின் பிற்பகுதியில், அந்த இரு நகரங்களுக்கும் இடையிலான சாலை இணைப்புகள் மிக முக்கியமான போக்குவரத்து முறையாக மாறின. அதன் விளைவாக பிந்தாங்கூர் ஆற்றின் நீர்வழிப் பாதையும் மூடப்பட்டது.
பிந்தாங்கூர் நகரத்திற்கு மிக அருகிலுள்ள நகரம் சிபு நகரம் ஆகும். தற்போது சிபு நகரத்தை போர்னியோ நெடுஞ்சாலை (Pan-Borneo Highway) வழியாக 45 நிமிடப் பயண நேரத்தில் செல்ல இயலும். ஆனால் அதற்கு முன்பு சிபு நகரத்திற்குச் செல்ல பிந்தாங்கூர் ஆறு பயன்படுத்தப்பட்டது. இரண்டு மணி நேரம் பிடிக்கும்.
Brooke had been able to take over Rajang river in 1853, and managed to secure Mukah and surrounding rivers in 1861.