பிந்தியாவாசினி தேவி | |
---|---|
பிறப்பு | முஜாஃபர்பூர், பிகார், இந்தியா |
இறப்பு | 18 ஏப்ரல்2006 கங்கர்பாக், பாட்னா, பிகார், இந்தியா |
பணி | நாட்டுப்புற இசைக் கலைஞர் |
அறியப்படுவது | இந்திய நாட்டுப்புற இசை |
வாழ்க்கைத் துணை | ஷேதேவேஷ்வர் சந்திரா வர்மா |
பிள்ளைகள் | இரு மகன்கள்- (சநதோஷ் குமார் சின்ஹா, சுதிர் குமார் சின்ஹா) மற்றும் ஒரு மகள்- (புஷ்பாராணி மது) |
விருதுகள் | பத்மஸ்ரீ சங்கீத நாடக அகாடமி விருது சங்கீத நாடக அகாடமி உதவித் தொகை பெற்றவர் அகில்யாபாய் விருது |
பிந்தியவாசினி தேவி, ஒரு இந்திய நாட்டுப்புற இசைக்கலைஞர் மற்றும் நாட்டுப்புற இசையை ஊக்குவித்தவர். இவர் 2006ஆம் ஆண்டு இறந்தார். பாட்னாவில் விந்தியா கலா மந்திர் என்ற இசை அகாடமியை நிறுவினார். அகாடமி, லக்னோவின் பட்கண்டே பல்கலைக்கழகத்துடன் 55 ஆண்டுகளுக்கு முன் இணைக்கப்பட்டது. தற்போது, வித்யா கலா மந்திர் இசை அகாடமியை அவரது மருமகள் ஷோபா சின்ஹாவும், மகன் சுதிர் குமார் சின்ஹாவும் நிர்வகிக்கின்றனர்.[1] [2] இந்தியாவின் பீகார் மாநிலத்தில் முசாபர்பூரில் பிறந்த பிந்தியாவாசினி தேவி, மைதிலி, போஜ்புரி மற்றும் மாகஹி நாட்டுப்புற இசையில் நிபுணத்துவம் பெற்றவர். விவா கீத் [3] திரைப்படத்தில் சோட் துல்ஹா கே என்ற பிரபலமான பாடலையும் அவர் பாடியுள்ளார், மேலும் அவரது பல பாடல்கள் குறுவட்டு வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளன. [4]
இந்திய அரசின் நான்காவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்மஸ்ரீ விருதை 1974 ஆம் ஆண்டில் பெற்றார்.. [5] 1991 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமி வருடாந்திர விருதை அவருக்கு கொடுத்து சிறப்பித்தது.[6] [2] அதைத் தொடர்ந்து 2006 இல் அகாடமி பெல்லோஷிப்பைப் பெற்றார். [7] அவர் 1998 இல் மத்திய பிரதேச அரசிடமிருந்து அஹில்யா பாய் விருதைப் பெற்றார். [1] 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதியன்று பிந்தியவாசினி தேவி 86 வயதில் தனது கங்கர்பாக் இல்லத்தில் இறந்தார், அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உண்டு.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)