Bintulu Airport</center | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிந்துலு வானூர்தி நிலையம் | |||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் Malaysia Airports Holdings Berhad | ||||||||||
சேவை புரிவது | பிந்துலு பிரிவு, சரவாக், கிழக்கு மலேசியா | ||||||||||
அமைவிடம் | பிந்துலு, சரவாக், மலேசியா | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00) | ||||||||||
உயரம் AMSL | 74 ft / 22.5552 m | ||||||||||
ஆள்கூறுகள் | 03°07′27″N 113°01′11″E / 3.12417°N 113.01972°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2020) | |||||||||||
| |||||||||||
பிந்துலு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: BTU, ஐசிஏஓ: WBGB); (ஆங்கிலம்: Bintulu Airport; மலாய்: Lapangan Terbang Bintulu) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் பிந்துலு பிரிவு; பிந்துலு மாவட்டத்தில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[3]
இந்த வானூர்தி நிலையம் சிறியதாக இருந்தாலும், போயிங் 747 போன்ற பெரிய விமானங்களைக் கையாளக் கூடியது. பிந்துலு நகரின் தென்மேற்கே 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பிந்துலு வானூர்தி நிலையத்தின் வரலாறு 1934-ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. ஒரு முனையில் கடல் கடற்கரைக்கும்; மறுமுனையில் ஓர் ஆற்றுக்கும் இடையே ஓர் ஓடுபாதையைக் கொண்ட ஒரு வானூர்தி நிலையத்தை, அப்போதைய பிரித்தானிய அரசாங்கம் கட்டத் தொடங்கியது.
நிதி சிக்கல்களின் காரணமாக 1938-இல் நிறுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, நேச நாட்டுப் படைகள், அந்த வானூர்தி நிலையத்தின் மீது குண்டுகள் வீசிக் கடுமையாகத் தாக்கின. நிலையம் பெரிதும் சேதம் அடைந்தது.
பின்னர் ஆங்கிலேயர்கள் அந்த விமான ஓடுபாதையை மீண்டும் கட்டினார்கள். 1955-இல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியது. 2002-இல், பழைய வானூர்தி நிலையத்திற்குப் பதிலாக புதிய பிந்துலு வானூர்தி நிலையம் கட்டப்பட்டது.
பின்னர், 1955 செப்டம்பர் 1-ஆம் தேதி, பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. போர்னியோ ஏர்வேஸ் வானூர்தி நிறுவனத்திற்குச் சொந்தமான இரு வகையான (de Havilland DH.89 Dragon Rapide); (Scottish Aviation Twin Pioneer) விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
1963-இல், டிசி-3 (DC-3) போன்ற பெரிய வகை விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1966-ஆம் ஆண்டில், கட்டித்தார் (bitumen) மூலம் ஓடுபாதை மறுசீரமைக்கப்பட்டது. மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக முனையக் கட்டிடமும் விரிவாக்கப்பட்டது.
1 ஜூலை 1968-இல், மலேசியா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Malaysia-Singapore Airlines) விமான நிறுவனம், போக்கர் 27 (Fokker 27) ரக விமானங்களின் சேவையை அறிமுகப்படுத்தியது.
பின்னர் 1981-இல், போக்கர் 50 (Fokker 50) ரக விமானங்களுக்காக நிலையத்தின் முனையக் கட்டிடப் பகுதி நீட்டிக்கப்பட்டது. பழைய விமான நிலையம் 30 மார்ச் 2003-இல் மூடப்பட்டது. நகரத்திற்கு வெளியே ஒரு புதிய இடத்திற்கு விமானச் சேவை மாற்றம் செய்யப்பட்டது.[4].
செப்டம்பர் 2005-இல், குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர்ஏசியா; பிந்துலு வானூர்தி நிலையத்தில் இயங்கத் தொடங்கியது. அதன் பின்னர் அதன் துணை நிறுவனமான பிளை ஏசியன் எக்ஸ்பிரஸ் (FlyAsianXpress), 1 ஆகஸ்ட் 2006-இல் முக்கிய உள்நாட்டு வழித்தடங்களில் சேவையை மேற்கொண்டது. 30 செப்டம்பர் 2007 வரை அந்தச் சேவை தொடர்ந்தது. 1 அக்டோபர் 2007 அன்று,
அதன் பின்னர் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான மாஸ் விங்ஸ் நிறுவனத்திற்கு, சேவை மாற்றம் செய்யப்பட்டது. அந்தச் சேவை இன்று வரை தொடர்கிறது.
ஆண்டு | பயணிகள் வருகை |
பயணிகள் % மாற்றம் |
சரக்கு (டன்கள்) |
சரக்கு % மாற்றம் |
வானூர்தி நகர்வுகள் |
வானூர்தி % மாற்றம் |
---|---|---|---|---|---|---|
2003 | 427,894 | 940 | 13,627 | |||
2004 | 464,576 | 8.6 | 1,375 | 46.3 | 13,546 | ▼ 0.6 |
2005 | 487,077 | 4.8 | 2,110 | 53.4 | 13,619 | 0.5 |
2006 | 449,673 | ▼ 7.7 | 2,205 | 4.5 | 11,804 | ▼ 13.3 |
2007 | 381,158 | ▼ 15.2 | 2,252 | 2.1 | 7,093 | ▼ 39.9 |
2008 | 417,918 | 9.6 | 1,978 | ▼ 12.2 | 16,787 | 136.7 |
2009 | 487,060 | 16.5 | 1,903 | ▼ 3.8 | 51,009 | 203.9 |
2010 | 557,459 | 14.4 | 1,703 | ▼ 10.5 | 24,246 | ▼ 52.5 |
2011 | 590,253 | 5.9 | 2,071 | 21.6 | 17,122 | ▼ 29.4 |
2012 | 661,553 | 12.1 | 2,574 | 24.3 | 12,294 | ▼ 28.2 |
2013 | 779,774 | 17.9 | 2,553 | ▼ 0.8 | 13,661 | 11.1 |
2014 | 832,440 | 6.8 | 2,318 | ▼ 9.2 | 12,968 | ▼ 5.1 |
2015 | 800,008 | ▼ 3.9 | 2,383 | 2.8 | 12,638 | ▼ 2.5 |
2016 | 805,206 | 0.6 | 2,647 | 11.1 | 12,130 | ▼ 4.0 |
2017 | 849,596 | 5.5 | 2,211 | ▼ 16.4 | 12,021 | ▼ 0.9 |
2018 | 923,033 | 8.6 | 3,566 | 25.1 | 13,062 | 8.7 |
2019 | 1,114,513 | 20.7 | 4,659 | 30.7 | 12,901 | ▼ 1.2 |
2020 | 370,437 | ▼ 66.8 | 1,378 | ▼ 70.4 | 6,529 | ▼ 49.4 |
சான்று: மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்[5] |
தர வரிசை |
இலக்குகள் | பயணங்கள் (வாரம்) |
வானூர்தி நிறுவனங்கள் |
---|---|---|---|
1 | கோலாலம்பூர்–சிப்பாங், கோலாலம்பூர் | 35 | ஏர் ஏசியா, மலேசிய ஏர்லைன்சு |
2 | கூச்சிங், சரவாக் | 35 | ஏர் ஏசியா, |
3 | கோத்தா கினபாலு | 14 | ஏர் ஏசியா |
4 | ஜொகூர் பாரு | 3 | ஏர் ஏசியா |
5 | மிரி | 14 | மாஸ் விங்ஸ் |
6 | சிபு | 14 | மாஸ் விங்ஸ் |
7 | முக்கா | 2 | மாஸ் விங்ஸ் |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)