மேலோட்டம் | |
---|---|
அமைவிடம் | பினாங்கு, மலேசியா |
ஆள்கூறுகள் | 5°26′35.4″N 100°22′48.3″E / 5.443167°N 100.380083°E |
வழித்தடம் | ![]() |
தொடக்கம் | 2016 |
முடிவு | 2025 |
செய்பணி | |
பணி ஆரம்பம் | 2017 |
பணி நிறைவு | ஜெனித் கூட்டமைப்பு நிறுவனம் Consortium Zenith BUCG Sdn Bhd |
உரிமையாளர் | 1. பினாங்கு மாநில அரசாங்கம் 2. ஜெனித் கூட்டமைப்பு நிறுவனம் |
தொழினுட்பத் தகவல்கள் | |
நீளம் | 7.2 கி.மீ. |
தண்டவாளங்களின் எண்ணிக்கை | 6 |
தொழிற்படும் வேகம் | 90 km/h |
பினாங்கு கடலடி சுரங்கப்பாதை (ஆங்கிலம்: Penang Undersea Tunnel; (மலாய் Terowong Bawah Laut Pulau Pinang) என்பது மலேசியா, பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டத்தில்; பட்டர்வொர்த் நகரத்திற்கு அருகில் கட்டப்பட்டு வரும் ஒரு சுரங்கப்பாதை ஆகும்.[1]
இந்தக் கடலடி சுரங்கப்பாதை தீபகற்ப மலேசியாவின் பட்டர்வொர்த் நகரத்தையும்; பினாங்குத் தீவின் ஜார்ஜ் டவுன் நகரத்தையும் இணைக்கின்றது.
இதுவே மலேசியாவின் முதல் கடலுக்கடிச் சுரங்கப் பாதை. 7.2 கி.மீ. நீளம் கொண்ட இந்த பினாங்கு கடலடி சுரங்கப்பாதை, பினாங்கு தீவிற்குச் செல்வதற்கான நேரத்தைப் பெரிய அளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. கட்டுமானம் 2016-ஆம் ஆண்டில் தொடங்கியது.[2]
இந்தச் சுரங்கப்பாதை கிழக்கில் பட்டர்வொர்த் நகரம்; செபராங் பிறை நகரம்; மற்றும் மேற்கில் ஜார்ஜ் டவுன் நகரம் ஆகிய நகரங்களை இணைக்கின்றன. இந்த்த் திட்டத்தைப் பின்பற்றி மலாக்கா மாநிலத்தில் கடலடி சுரங்கப்பாதை அமைக்கும் ஒரு திட்டம் உருவாகி உள்ளது. மலாக்கா நகரையும் இந்தோனேசியா துமாய் நகரையும் இணைப்பதே அந்தத் திட்டமாகும்.
கட்டுமான வேலைகள் இரு பகுதிகளாக நடைபெறுகின்றன. ஒரு பகுதி: தீபகற்ப மலேசியாவின் மலேசியாவின் வடக்கு-தெற்கு விரவுச்சாலையை ஒட்டிய பாகான் ஆஜாம் சிறுநகரத்தில் இருந்து, தீபகற்ப மலேசியப் பகுதியின் கட்டுமான வேலைகள் தொடங்குகின்றன.[2]
அதே போல மற்றொரு பகுதி: பினாங்குத் தீவின்; ஜார்ஜ் டவுன் நகரத்தில் இருந்து, பினாங்குத் தீவின் கட்டுமான வேலைகள் தொடங்குகின்றன.[3]
சுருங்கக் கூறின், பினாங்கு தீவின் பிரதான நிலப்பரப்பில் உள்ள பட்டர்வொர்த் நகரத்திற்கும்; ஜார்ஜ் டவுன் நகரத்திற்கும் இடையே கடலுக்கு அடியில் ஒரு சுரங்கப் பாதை அமைப்பதே பினாங்கு கடலடி சுரங்கப்பாதைத் திட்டமாகும்.[4]
பினாங்கு முதல் பாலத்தின் போக்குவரத்தைக் குறைக்கவும் மற்றும் பினாங்குத் தீவில் உள்ள மற்ற நெரிசலான இடங்களில் போக்குவரத்தைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டது. அந்த வகையில் பினாங்கு அரசாங்கத்தால் இந்தத் திட்டம் முன்னெடுத்துச் செயல்படுத்தப் படுகிறது.
2025-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும் போது, இந்தச் சுரங்கப்பாதை மலேசியாவின் முதல் கடலடி சுரங்கப்பாதையாக அமையும். சிங்கப்பூரில் உள்ள மரினா கரையோர விரைவுச்சாலை (Marina Coastal Expressway)-க்கு அடுத்த நிலையில், தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது கடலடிச் சுரங்கப் பாதையாகவும் அமையும்.
இந்த சுரங்கப்பாதை, ரிங்கிட் RM 6.3 பில்லியன் செலவில், மிகப் பெரிய பொதுப் பணித் திட்டமாக இருக்கும். எதிர்கால விரிவாக்கங்களைக் கருத்தில் கொண்டு, இந்தக் கடலுக்கடிச் சுரங்கப் பாதையில், ஒரு சுங்கச் சாவடியும் மற்றும் பினாங்கு இலகு தொடருந்துக்கு (Penang LRT) இட வசதிகளும் அமைத்துக் கொடுக்கப்படும்.
கி.மீ | வெளியேற்றம் | சந்திப்பு | பயணம் | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
![]() மலேசிய விரவுச்சாலை |
பாகான் ஆஜாம் தெற்கு சந்திப்பு | ![]() வடக்கு தெலுக் ஆயர் தாவார் பட்டர்வொர்த் சுங்கை பட்டாணி ஈப்போ தெற்கு செபராங் ஜெயா பிறை கூலிம் கிரிக் |
சந்திப்பு | ||
![]() ![]() ![]() | |||||
![]() ![]() | |||||
பாகான் ஆஜாம் சுங்கச் சாவடி | |||||
பினாங்கு கடலடி சுரங்கப்பாதை வடக்கு கால்வாய், பினாங்கு |
சுரங்கப் பாதையின் தொடக்கம்/முடிவு | ||||
பினாங்கு கடலடி சுரங்கப்பாதை வடக்கு கால்வாய், பினாங்கு |
|||||
பினாங்கு கடலடி சுரங்கப்பாதை வடக்கு கால்வாய், பினாங்கு |
சுரங்கப் பாதையின் தொடக்கம்/முடிவு | ||||
MES-EXIT மலேசிய விரவுச்சாலை |
கர்னி டிரைவ் இரட்டைச் சாலை பரிமாற்றம் | வடமேற்கு கர்னி டிரைவ் இரட்டைச் சாலை கர்னி டிரைவ் தஞ்சோங் பூங்கா பத்து பெரிங்கி |
சந்திப்பு | ||
![]() | |||||
ஜார்ஜ் டவுன் உள்வட்டச் சாலை | |||||
தென்மேற்கு ஜார்ஜ் டவுன் உள்வட்டச் சாலை நகர மையம் ஜாலான் சுல்தான் அகமது ஷா (நார்த்தாம் சாலை) |