பினாங்கு கொடி மலை தொடருந்து

பினாங்கு கொடி மலை தொடருந்து
Penang Hill Railway
Kereta api Bukit Bendera
கொடி மலை இழுவை ஊர்தி
கண்ணோட்டம்
நிலைசெயல்பாடு உள்ளது
வட்டாரம்பினாங்கு மலை , பினாங்கு, மலேசியா
நிலையங்கள்8
இணையதளம்www.penanghill.gov.my
சேவை
வகைஇழுவை ஊர்தி
சேவைகள்2
செய்குநர்(கள்)பினாங்கு கொடிமலை நிறுவனம் (Perbadanan Bukit Bendera Pulau Pinang)
சுழலிருப்பு2 டோப்பல்மேயர் கராவென்டா தொடருந்து பெட்டிகள் [1]
வரலாறு
திறக்கப்பட்டது21 அக்டோபர் 1923; 101 ஆண்டுகள் முன்னர் (1923-10-21)[2]
தொழில்நுட்பம்
தண்டவாள நீளம்1,996 மீட்டர்கள் (6,549 அடி)
தட அளவி1,000 mm (3 ft 3 38 in)
வழி வரைபடம்

மேல் நிலையம்
பாதைப்பலம் நிலையம்
கீழ் நிலையம்

பினாங்கு கொடி மலை தொடருந்து அல்லது கொடி மலை இழுவை ஊர்தி (மலாய்: Kereta api Bukit Bendera; ஆங்கிலம்: Penang Hill Railway) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன், ஆயர் ஈத்தாம் புறநகர்ப் பகுதியில் உள்ள தொடருந்து அமைப்பைக் குறிப்பிடுவதாகும். இந்தத் தொடருந்து அமைப்பு தன் சேவையில் இழுவை ஊர்திகளைப் பயன்படுத்துகிறது.[3]

இந்தத் தொடருந்து சேவை முதன்முதலில் 1923-இல் இரண்டு பிரிவு தொடருந்து வழித்தடங்களைக் கொண்டு இருந்தது. பின்னர் 2010-இல் ஒரு வழித்தடமாக மாற்றப்பட்டது. பயண நேரம் ஐந்து முதல் இருபது நிமிடங்கள் வரை ஆகலாம். கொடி மலை தொடருந்து சேவை, தொடக்கத்தில் பிரித்தானிய காலனித்துவ சமூகத்தவர் பினாங்கு கொடி மலையின் குளிர்ந்த காற்றை அனுபவிப்பதற்காகக் கட்டப்பட்டது.

பொது

[தொகு]

இந்தத் தொடருந்து வழித்தடம் 1901 மற்றும் 1905 க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக கட்டுமானம் நிறுத்தப்பட்டது. முதலில் இந்தச் சேவைக்கு நீராவி இயந்திரத்தைப் பயன்படுத்னார்கள். அந்த முயற்சி தோல்வி அடைந்தது. பின்னர் பற்பல முயற்சிகளுக்குப் பின், 1 சனவரி 1924-இல் அதிகாரப்பூர்வமாகத் திறப்புவிழா கண்டது.

பினாங்கு கொடி மலை கருங்கல் சார்ந்த ஓர் நிலப்பகுதியாகும். இந்த மலை வடக்குப் பகுதியில் உயரமாகச் செல்கிறது. வெஸ்டர்ன் ஹில் என்று அழைக்கப்படும் மேற்கு மலைப் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து 833 மீட்டர் (2,723 அடி) வரை உயரமாக இருக்கிறது. மேற்கு மலைப் பகுதியில் சில உச்சி மலைகளும் உள்ளன.

அந்தப் பகுதியில் உள்ள அட்மிரல் மலை (மலாய் மொழி: Bukit Laksamana; ஆங்கிலம்: Admiral Hill), புலி மலை, கொடிக் கம்ப மலை, அரசாங்க மலை போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். கொடிக் கம்ப மலை (Flagstaff Hill) 735 மீட்டர் உயரம் கொண்டது. இந்த மலையில் இருந்து, சிறு ஆறுகளும் அருவிகளும் ஊற்றெடுக்கின்றன. அவற்றுள் சுங்கை பினாங் என்று அழைக்கப்படும் பினாங்கு ஆறுதான் பெரியது.

கட்டணம்

[தொகு]

இந்தத் தொடருந்து கீழ் நிலையத்திலிருந்து மேலே உள்ள நிலையத்திற்கு நேரடியாகப் பயணிக்கிறது. இருப்பினும் பயணிகள் கேட்டுக் கொண்டால் மற்ற இடைநிலை நிலையங்களிலும் நிறுத்தப்படலாம். மலேசிய குடிமக்களுக்கு, நுழைவுச்சீட்டுக்கான கட்டணம் RM 12; மற்றும் மூன்று முதல் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு RM6 ஆகும். மூத்த குடிமக்களுக்கு ஒரு நபருக்கு RM 6 என்ற மலிவான கட்டணம் உள்ளது. மலேசியர்கள் அல்லாதவர்களுக்கு கட்டணம்; பெரியவர்களுக்கு RM 30 மற்றும் குழந்தைகளுக்கு RM 15 ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Annual Brochure 2011". Doppelmayr Seilbahnen GmbH.
  2. Joe Bindloss, Celeste Brash (2008). Kuala Lumpur, Melaka & Penang. Lonely Planet Publications. p. 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1741044850.
  3. "Penang Hills Funicular Railway". Joe Thompson. பார்க்கப்பட்ட நாள் March 12, 2007.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]