பினாங்கு சாலை இராஜாதி மேடு Penang Road Jalan Penang 檳榔律 | |
---|---|
பராமரிப்பு : | பினாங்கு தீவு மாநகராட்சி |
அமைவிடம்: | ஜார்ஜ் டவுன் |
வடக்கு முனை: | பினாங்கு பார்குவார் சாலை |
தெற்கு முனை: | மெகசின் சர்கஸ் (கொம்தார் கோபுரம்) |
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
---|---|
அலுவல்முறைப் பெயர் | பினாங்கு சாலை - இராஜாதி மேடு |
பகுதி | பினாங்கு ஜார்ஜ் டவுன் மலாக்கா நீரிணை வரலாற்று நகரம் |
கட்டளை விதி | ii, iii, iv |
உசாத்துணை | 1223 |
பதிவு | 2008 (32-ஆம் அமர்வு) |
பினாங்கு சாலை எனும் இராஜாதி மேடு (ஆங்கிலம்: Penang Road; மலாய்: Jalan Penang; சீனம்: 檳榔律) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன் மாநகரில் உள்ள மிக முக்கியமான சாலையாகும். இந்தச் சாலை, வடக்கில் பார்குவார் சாலையையும்; தெற்கில் கொம்தார் கோபுரத்தையும் இணைக்கிறது.
ஜார்ஜ் டவுன் நகர மையத்திற்குள் முக்கியச் சாலையாக விளங்கும் இந்தப் பினாங்கு சாலையில் அதிகமான போக்குவரத்து நெரிசல்கள் உள்ளன. இந்தச் சாலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்திற்குள் உள்ளது.
இங்கு ஈரநிலைக் காய்கறிச் சந்தைகள்; மதுபான விடுதிகள்; பல்வேறு உணவு மையங்கள் காணப்படுகின்றன; மற்றும் சௌராஸ்தா சந்தை (Chowrasta Market) எனும் இனும் சார்ந்த சந்தையின் இருப்பிடமாகவும் உள்ளது.
சௌராஸ்தா சந்தையில் பினாங்கின் தனித்துவமான பல்வேறு உள்ளூர்த் தயாரிப்புகள், ஜாதிக்காய் தயாரிப்புகள்; மற்றும் அடுமனைப் பண்டங்கள் கிடைக்கின்றன.
பினாங்கு இந்தியர், இந்தச் சாலையை இராஜாதி மேடு (இராணி கதவுகள்) அல்லது ஏழு முச்சந்தி என்றும் அழைக்கிறார்கள். தமிழகத்தின் கடையநல்லூர் சமூகத்தினர் அங்கு அமைத்த இராணி கதவிற்கும்; இராஜாதி மேட்டிற்கும் தொடர்பு உள்ளதாக அறியப்படுகிறது.
கொம்தார் கோபுரம் கட்டப் படுவதற்கு முன்பு அங்கு 7 சாலைகள் ஒன்றாகச் சந்தித்த இடமாக இருந்ததால் அந்த இடத்திற்கு ஏழு முச்சந்தி எனும் பெயர் வழங்கப்பட்டது.
பிரான்சிஸ் லைட் திட்டமிட்டு உருவாக்கிய அசல் நகரப் பகுதிக்கு வெளியே கட்டப்பட்ட முதல் சாலை எனும் பெயர் இந்தப் பினாங்கு சாலைக்கு உள்ளது.
பல நூற்றாண்டுகளாக, பினாங்கு சாலை ஒரு சில்லறை விற்பனைத் தெருவாகவும்; குறிப்பாக சௌராஸ்தா சந்தைக்கு முன்னால் உள்ள பாதையில் சேவை செய்து வருகிறது. இந்த சௌராஸ்தா சந்தை 1890-களில் உருவாக்கப்பட்டது.[1]