பினாங்கு தாவரவியல் பூங்கா Penang Botanic Gardens | |
---|---|
வகை | தாவரவியல் பூங்கா |
அமைவிடம் | ஜார்ஜ் டவுன், பினாங்கு, மலேசியா |
உருவாக்கம் | 1884 |
நிலை | ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் |
பினாங்கு தாவரவியல் பூங்கா (Penang Botanic Gardens) என்பது மலேசியாவின் பினாங்கு மாகாணத்தின் ஜார்ஜ் டவுன் நகரத்தில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா ஆகும்.[1]
தொடக்கத்தில் இத்தாவரவியல் தோட்டம் 1884 ஆம் ஆண்டில் ஒரு பழைய கற்ச்சுரங்கத்தளத்தில் நிறுவப்பட்டது. பூங்காவின் முதல் கண்காணிப்பாளராக பணியாற்றிய சார்லஸ் கர்டிஸ் என்பவரின் மேற்பார்வையில் தொடங்கப்பட்ட இப்பூங்கா ஒரு காலனித்துவ குடியேற்ற காலகட்டத்தில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட மிகப் பழமையான தாவரவியல் பூங்காக்களில் ஒன்றாகும்.
பினாங்கு தாவரவியல் பூங்கா பினாங்கு மலை உயிர்க்கோள பாதுகாப்பு பகுதியாகும், இப்பூங்கா ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக உயிர்க்கோள பாதுகாப்பு வலையமைப்பில் (WNBR) பட்டியலிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது . மேலும் மலேசியாவின் மூன்றாவது உயிர்க்கோள பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் இது உள்ளது .[2]
தற்போதைய தாவரவியல் தோட்டம் நிறுவப்படுவதற்கு முன்பு பினாங்கு தீவில் இரண்டு தாவரவியல் பூங்காக்கள் இருந்தன.
சார்சு நகரம் ஆகத்து 1786 இல் பினாங்கு தீவில் நிறுவப்பட்டது. மலாக்கா நீரிணை பகுதியில் டச்சு மேலாதிக்க மசாலா வணிகத்திற்கு போட்டியாக கிழக்கிந்திய கம்பெனியால் சார்சு நகரத்தில் குடியேற்றங்கள் தொடங்கப்பட்டன.
1794 ஆம் ஆண்டில், பினாங்கு தீவில் நறுமண மசாலா தோட்டங்களை நிறுவ கிழக்கிந்திய நிறுவனம் கிறிஸ்டோபர் ஸ்மித்தை பினாங்கிற்கு தாவரவியலாளராக நியமித்தது. முதலில் இலண்டன் கியூ தாவரவியல் பூங்காவில், பயிற்சி பெற்ற ஸ்மித் 1794 ஆம் ஆண்டின் மத்தியில் 10.5 ஹெக்டேர் பரப்பில் ஓர் சிறிய தோட்டத்தை ஆயர் ஈத்தாம் பள்ளத்தாக்கில் உருவாக்கினார். பின்னர் சுங்கை கெலுவாங் பகுதியில் 158 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு பெரிய தோட்டத்தை உருவாக்கினார்.[3] இருப்பினும் இரண்டு தோட்டங்களின் சரியான இடம் தெளிவாக இல்லை.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)