லிட்டில் இந்தியா பினாங்கு | |
---|---|
நகர்ப்பகுதி | |
Little India | |
ஆள்கூறுகள்: 5°25′04″N 100°20′19″E / 5.417742°N 100.338556°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | வட கிழக்கு பினாங்கு தீவு |
அரசு | |
• உள்ளாட்சி மன்றம் | பினாங்கு தீவு மாநகராட்சி |
• பினாங்கு தீவு மேயர் | இயூ துங் சியாங் (Yew Tung Seang) |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 10200 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +604 |
இணையதளம் | penanglittleindia |
லிட்டில் இந்தியா பினாங்கு, (ஆங்கிலம்: Little India, Penang; மலாய்: Little India, Pulau Pinang; சீனம்: 槟城小印度) என்பது பினாங்கு மாநிலத்தில், ஜார்ஜ் டவுன் மாநகர்ப் பகுதியில் மலேசிய இந்தியர் மிகுதியாக வாழும் இடங்களில் ஒன்றாகும்.[1]
குட்டி இந்தியா என்று அழைக்கப்படும் இந்த இடம், ஜார்ஜ் டவுன் மாநகர்ப் பகுதியில் மிகவும் பரபரப்பான பகுதிகளில் ஒன்றாகவும்; மலேசியாவின் ஓர் இனக் குழுவினரின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஓர் இடமாகவும் அறியப் படுகிறது.
பினாங்கு மாநிலத்தில் மிகப் பழைமையான ஆலயமாகக் கருதப்படும் பினாங்கு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் இங்குதான் அமைந்து உள்ளது.[2][3]
லிட்டில் இந்தியா வணிக வளாகம், பினாங்கின் ஜார்ஜ் டவுன் மாநகரின் முக்கியமான வணிகத் தளமாகவும் இயங்கி வருகிறது. இங்கு இந்தியர் தொடர்புடைய பல்வேறு வணிக மையங்களைக் காணலாம்.
இங்குள்ள வணிகத்தின் பெரும்பகுதி இந்தியர்களுக்குச் சொந்தமானது என்றாலும், சிறிய எண்ணிக்கையிலான சீனர்க் கடைகளும் உள்ளன. இங்குள்ள மார்க்கெட் தெருவில் (Market Street) பல இந்திய ஆடை அலங்கார கடைகள் உள்ளன.
பெரும்பாலும் சேலை, பட்டு, பருத்தி துணிமணிகள்; மற்றும் இந்தியாவின் சாரம் கொண்ட பற்பல பொருள்களையும் விற்கிறார்கள். பாரம்பரிய உடைகள், நறுமணப் பொருட்கள், தங்க ஆபரணங்கள், நவரத்தினங்களைக் கொண்ட ஆடை அணிகலன்கள் போன்றவை பெரும்பாலான கடைகளால் பரவலாக விற்பனை செய்யப் படுகின்றன.
இந்தியர் சமையல் மற்றும் மேற்கத்திய உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. பாலிவுட் பாடல்களைக் கொண்ட இசைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளும் உள்ளன.[4]
பினாங்கின் லிட்டில் இந்தியா வளாகம், பினாங்கு தீவின் நிறுவனர் சர் பிரான்சிஸ் லைட் (Sir Francis Light) அவர்களின் நிர்வாகத்தின் கீழ் சூலியா தெருவில் (Chulia Street) தொடங்கியது. அந்தக் காலக் கட்டத்தில் இங்கு குடியேறியவர்களில் வேளாண் தொழிலாளர்கள், நறுமணப் பொருள் வணிகர்கள் மற்றும் லேவாதேவி செய்பவர்கள் போன்றோர் பெரும்பான்மை மக்கள் ஆகும்.[4]
அப்போதைய இந்தியச் சமூகம் தமிழர்கள், பஞ்சாபியர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், குஜராத்திகள் என பல இனத்தவரைக் கொண்டு இருந்தது. மக்கள் பெருக்கத்தினால் ஒரே தெருவில் இருந்த லிட்டில் இந்தியா வளாகம்; குயின் ஸ்ட்ரீட் (Queen Street), பினாங்கு தெரு (Penang Street), மார்க்கெட் தெரு (Market Street) என பல சாலைகளை உள்ளடக்கி விரிவு அடைந்தது.[4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)