பிபன் சந்திரா

பிபன் சந்திரா
பிறப்பு(1928-05-27)27 மே 1928
கங்காரா , பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு30 ஆகத்து 2014(2014-08-30) (அகவை 86)
குர்காவுன், அரியானா, இந்தியா
குடியுரிமைஇந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்
விருதுகள்பத்ம பூசண் (2010)

பிபன் சந்திரா (1928 - ஆகத்து 30, 2014[1]) நவீன இந்திய அரசியல் மற்றும் பொருளாதார வரலாற்று அறிஞர்களில் ஒருவர். இடதுசாரி சிந்தனையோட்டம் உடைய வரலாற்று ஆய்வாளர். பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர் .

பிறப்பும் கல்வியும்

[தொகு]

இமாச்சலப் பிரதேசத்தில் பிறந்தவர். லாகூரிலுள்ள போர்மேன் கிறித்துவக் கல்லூரியிலும், ஐக்கிய அமெரிக்க நாடுகளிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும், கல்வி பயின்றார். தில்லிப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.

பணி

[தொகு]

தில்லியில் உள்ள இந்து கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியாகவும் பணியாற்றியுள்ளார். மெக்சிகோவிலுள்ள மெக்சிகோ கல்லூரியில் வருகைதரு பேராசிரியராகவும் இருந்துள்ளார். என்கொயரி என்னும் இதழிகையைத் தொடங்கி சில ஆண்டுகள் அதன் ஆசிரியர் குழுவிலும் இருந்தார்.

பதவி மற்றும் விருது

[தொகு]

இந்திய வரலாற்றுப் பேராயத்தின் தலைவராக 1985ஆம் ஆண்டு பதவி வகித்திருக்கிறார். பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினராகவும், நேசனல் புக் டிரஸ்டின் அவைத்தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு பத்ம பூசண் பெற்றார். 2013 ஆம் ஆண்டு திசம்பரில் பிகாரில் உள்ள ஆசியக் கழகத்தில் பிபன் சந்திராவுக்கு 'இதிகாச ரத்தினா' என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

புத்தகங்கள்

[தொகு]

இவருடைய நவீன இந்திய வரலாற்றாய்வுகள் பல புத்தகங்களாக வந்துள்ளன.

  • நவீன கால இந்தியா
  • சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா
  • சுதந்திரத்துக்கான இந்தியாவின் போராட்டம் (1857 முதல் 1947 வரை)
  • நவீன இந்தியாவில் மதவாதம்
  • நவீன இந்தியாவில் தேசியவாதம் மற்றும் மதவாதம்
  • Essays on Indian Nationalism
  • Essays on Contemporary India
  • Ideology and Politics in Modern India

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Historian Bipan Chandra is dead". Archived from the original on 2014-08-30. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]