பிபுரோன் அரணை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | யூட்ரோபிசு
|
இனம்: | யூ. பைப்ரோனி
|
இருசொற் பெயரீடு | |
யூட்ரோபிசு பைப்ரோனி (கிரே, 1838) | |
வேறு பெயர்கள் [2] | |
|
கடற்கரை அரணை, பிபுரோன் அரணை அல்லது பாம்பு ராணி (Eutropis bibronii, பொதுவாக Bibron's mabuya, Bibron's skink மற்றும் seashore skink என்றும் அறியப்படுகிறது) என்பது அரணை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பல்லி இனமாகும். இந்தியாவும் இலங்கையும் இந்த இனத்தின் தாயகம். [1][2]
இதற்கான சிற்றினப் பெயரான பிப்ரோனி என்பது பிரெஞ்சு ஊர்வனவியலாளரான கேப்ரியல் பிப்ரான் (1806-1848) நினைவாக வைக்கப்பட்டது. [3]
பிபுரோன் அரணைகளின் தலை ஓரளவு தட்டையானது. கீழ் கண்ணிமையானது ஒளிபுகும் வகையில் உள்ளது. இதன் முதுகுப்புறமும் பக்கவாட்டிலும் உள்ள விலாமடிப்புகள் கூர்மையானவை. இதன் முதுகுப்புறம் ஆலிவ் பழுப்பு நிறமானது. முதுகின் நடுவில் வெளிர் பட்டையும் அதன் விளிம்புகளில் அடர் நிறப் படைகளும் நீண்டு இருக்கும். இந்தப் பட்டைகள் வாலின் அடிப்பகுதி வரை செல்கிறன்றன. [4]
இவை வளைவாழ்க்கை வாழும் இனமாகும். இவை செடிகளுக்கு அடியில் உள்ள மணல் திட்டுகளில் வளை அமைத்துக் கொள்ளும். இது பொதுவாக கடலோர தாழ்நிலத்தில் (கடல் மட்டத்திலிருந்து 20 மீ (66 அடிக்கும் குறைவானது) வாழும் இனமாகும். ஆனால் உள்நாட்டில் 490 மீ (1,610 அடி) உயரம் வரை உறுதிப்படுத்தப்படாத பதிவுகள் உள்ளன. [1]
இந்த அரணையின் இனப்பெருக்க முறை தெரியவில்லை.