பிமல் குமார் ராய் (Bimal Kumar Roy) இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஆவார். கொல்கத்தாவிலுள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் பயன்பாட்டு புள்ளியியல் அலகின் மறைகுறியீட்டு தகவல் குழுமத்திலிருந்து வந்த ஒரு மறைகுறியீட்டாளர் பிமல் குமார் ராய் ஆவார் [1]. ரொனால்ட் சி. முல்லின் மற்றும் பால் யாக்கோப்பு செல்லன்பெர்க் ஆகியோரின் கூட்டு மேற்பார்வையின் கீழ், 1982 ஆம் ஆண்டில் ஒருங்கிணைப்பு மற்றும் தேர்வுமுறை என்ற தலைப்பில் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு இவர் தன்னுடைய முனைவர் பட்டத்தைப் பெற்றார் [2].
2015 ஆம் ஆண்டு சூன் மாதம் பேராசிரியர் ராய் இவருடைய நியமனம் முடிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார் [3]. இந்த நடவடிக்கையை அனைத்துலக கல்வி சமூகம் கடுமையாக விமர்சித்தது [4].
தற்போது இவர் ஒருங்கிணைப்பு மற்றும் மறைகுறியீட்டாளர் மற்றும் பரிசோதனை வடிவமைப்புகளில் புள்ளியியல் பயன்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்துவது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் [5]. 2015 ஆம் ஆண்டில் பேராசிரியர் ராய்க்கு இந்தியாவின் நான்காவது உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.