இனங்காட்டிகள் | |
---|---|
12078-32-9 | |
EC number | 235-140-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11965858 25509 |
| |
பண்புகள் | |
C7H6FeO3 | |
வாய்ப்பாட்டு எடை | 193.97 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் எண்ணெய் |
உருகுநிலை | 19 °C (66 °F; 292 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பியூட்டாடையீன் இரும்பு டிரைகார்பனைல் (Butadieneiron tricarbonyl) என்பது C7H6FeO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம இரும்புச் சேர்மமான இது பியூட்டாடையீனின் நன்கு ஆராயப்பட்ட உலோக அணைவுச் சேர்மமாகும். ஆரஞ்சு நிறத்தில் பாகுநிலையில் காணப்படும் இச்சேர்மம் அறைவெப்பநிலைக்கு சற்று குறைவான வெப்பநிலையில் உறைகிறது. பியூட்டாடையீன் இரும்பு டிரைகார்பனைல் பியானோ இருக்கை கட்டமைப்பை ஏற்கிறது. [1]
இரும்புபெண்டா கார்பனைலை டையீனுடன் சேர்த்து சூடுபடுத்தினால் பியூட்டாடையீன் இரும்பு டிரைகார்பனைல் உருவாகிறது. [2]
இணை டையீனின் இரும்பு(0) அணைவுச் சேர்மங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. பியூட்டாடையீன் வரிசையில் (η2-C4H6)Fe(CO)4 மற்றும் (η2:η2-C4H6)(Fe(CO)4)2 சேர்மங்கள் படிகமாக்கப்பட்டுள்ளன. [3] பதிலீடு செய்யப்பட்ட பியூட்டாடையீனின் பல அணைவுச் சேர்மங்கள் அறியப்படுகின்றன. (η4-ஐசோபிரீன்)இரும்பு டிரைகார்பனைல் இனம் பொருந்தா சமச்சீரின்மை கொண்டதாக உள்ளது. [4]