பியூட்டிபுல் | |
---|---|
இயக்கம் | ஜன் ஜெய்-ஹாங் |
தயாரிப்பு | கிம் கி-டக் டேவிடு சோ |
திரைக்கதை | ஜன் ஜெய்-ஹாங் |
நடிப்பு | சா சூ-யியோன் லீ சன்-ஹீ |
வெளியீடு | 14 பெப்பிரவரி 2008 |
ஓட்டம் | 88 நிமிடங்கள் |
நாடு | தென் கொரியா |
மொழி | கொரியன் |
மொத்த வருவாய் | ஐஅ$9,840[1] |
பியூட்டிபுல் 2008ல் வெளிவந்த தென்கொரியத் திரைப்படமாகும். இதனை ஜன் ஜெய்-ஹாங் இயக்கியிருந்தார்.[2] இத்திரைப்படத்தின் மூலக்கதை கொரியத் திரைப்பட இயக்குநர் கிம் கி-டக் உடையதாகும்.[3][4][5][6] இத்திரைப்படத்தில் கிம் கி-டக் இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார். சா சூ-யியோன்,லீ சன்-ஹீ முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
வன்புணர்வு செய்யப்பட்ட ஒரு அழகானப் பெண். அதனால் பாதிக்கப்பட்டு தன் அழகை வெறுப்பதும், ஆண்கள் அத்தனைப் பேரையும் தன்னை வன்புணர்வு செய்தவனாக் கற்பனை செய்து அனைவரையும் கொல்ல முனைவதும் கதை.
என்-யுவோங் மற்ற இளம்பெண்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு அழகான பெண். அவளுடைய இளமையையும், அழகையும் கண்டு எண்ணற்ற ஆண்கள் ஈர்க்கப்படுகின்றார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வாழும் என்-யுவோங்கிற்கு நிறைய காதல்கடிதங்களும், பூங்கொத்துகளும் தொடர்ந்து வருகின்றன. அவற்றையெல்லாம் தந்தவர்களிடமே திருப்பி ஒப்படைக்கும்படியும், முடியாவிட்டால் தூக்கி எறியும்படியும் காவலாளியிடம் கூறுகிறாள். அப்போது தவறி விழுகின்ற ஒரு பூவை மட்டும் எடுத்துக்கொள்கிறாள். அந்தப் பூவைக் கொடுத்தனுப்பிய சியோங்-மின் தன்னுடைய காதலை அவள் ஏற்றுக்கொண்டதாக மகிழ்ச்சியடைகிறான். மறுநாள் அந்தப்பூவை அவள் நிராகரித்துவிட கோபம் கொள்கிறான். அவள் தனியாக இருக்கும் போது, எரிவாயு உருளை கொண்டுவருவதாக பொய்யுரைத்து வீட்டிற்குள் நுழைகிறான். தன்னுடைய பூவை ஏன் நிராகரித்தாய், நான் என்ன தவறு செய்தேன் என வினவுகிறான். அதற்கு பதலிளிக்க விருப்பம் இல்லாமல், காவல்துறை அனுகப்போவதாகவும், உடனே வீட்டைவிட்டு வெளியேறும்படியும் கூறுகிறாள்.
ஆனால் சியோங்-மின் அவளை வன்புணர்வு செய்து அதனை புகைப்படமும் எடுத்துக் கொள்கிறான். மயக்கத்திலிருக்கும் அவளிடம் உன்னுடைய அழகே இவ்வாறு செய்ய வைத்துவிட்டது. நான் தவறானவன் அல்ல என்று கூறி தன்னுடைய அடையாள அட்டையை வைத்துவிட்டு செல்கிறான். இந்த சம்பவத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் என்-யுவோங் வீட்டிற்குள்ளையே முடங்கிக் கிடக்கிறாள். சியோங்-மின் தான் என்-யுவோங்கை வன்புணர்வு செய்துவிட்டதாக காவல்துறையிடம் சரணடைகிறான். உயர் காவல் அதிகாரி அவளை காவல்நிலையத்திற்கு கூட்டி வந்து கொடுமையான கேள்விகளைக் கேட்கிறார். ஆனால் அவர் அருகில் இருக்கும் காவல் அதிகாரி யுன்-சியோலுக்கு இவள் மேல் பரிவு வருகிறது. அவர் என்-யுவோங்கை மீட்டு வீட்டில் விடுகிறார்.
தன்னுடைய அழகால்தான் இவ்வாறு வன்புணர்வு நிகழ்ந்தது என்று என்-யுவோங் நினைத்து தன்னுடைய அழகை குழைக்க அதிகமாக உண்கிறாள். ஒரு நாளில் உணவு வாங்க போதிய பணமில்லாமல் திருடவும் செய்கிறாள். தொலைக்காட்சியில் ஒரு பெண் குண்டாக இருப்பது கூட அழகு, ஆனால் மிகவும் ஒல்லியாக இருப்பது அகோரமானது என்கிறாள். எனவே மிக அதிகமாக உடற்பயிற்சி செய்வதும், ஓடுவதுமாக இருக்கும் என்யுவோங். மிகவும் குறைவான உணவே எடுத்துக் கொள்கிறாள். அது அவளது உடலைப் பாதிக்க அவளைப் பின் தொடரும் யுன்-சியோல் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றுகிறார். மிகவும் ஒல்லியாக, கண்களில் கருவளையம் விழுந்து அசிங்கமாக மாறிய பின்னும் காவலாளியான யுன்-சியோல் அவளை பின்தொடர்ந்து அவளுக்கு வரும் இன்னல்களை தீர்க்கிறார்.
ஒரு கட்டத்தில் தன்னை வன்புணர்ந்த சியோங்-மினாக எல்லா ஆண்களையும் காணத்தொடங்குகிறாள். அதனால் சியோங்-மினென வேறொருவரை கொலைச்செய்யப் போகிறாள். அதனைத் தடுக்கும் காவலாளியிடம் தான் எப்படியாவது சியோங்-மின்னை கொலைசெய்ய வேண்டும் என்கிறாள். அவளுடையத் தவிப்பை அறிந்த காவலாளி யுன்-சியோல் அவள் உறங்கிக் கொண்டிருக்கும் போது, அவளுடைய கைகளில் துப்பாக்கியை வைத்து அது விலகாதவாறு டேப் சுற்றி ஒட்டிவிடுகிறார். பின் அவளை வன்புணர்வு செய்ய முனைகிறார். விழித்தெலும் அவளுக்கு முன்பு வன்புணர்ந்த சியோங்-மினாக தெரிய இவரைச் சுட்டுக் கொல்கிறாள். பின்பு அது காவலாளி என்று தெரிந்து மனமுடைந்து வீட்டைவிட்டு வெளியேறும் அவளுக்கு அனைத்து ஆண்களுமே சியோங்-மின்னாக தெரிய பார்த்தவர்களையெல்லாம் சுடத் தொடங்குகிறாள். அங்குவரும் காவல்துறை அவளைச் சுட்டுக் கொல்கிறது.
பியூட்டிபுல் திரைப்படம் 58வது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் பனோரமா பிரிவில் வெளியிடப்பட்டது.[5][7] பிப்ரவரி 14, 2008ல் மிகக் குறைந்த அளவான ஐந்து சியோல் திரையரங்குகளில் மட்டும் தென் கொரியாவில் வெளியானது.[1][8][9]
இத்திரைப்படம் 2008ல் ப்யூகூவோகா ஆசியத் திரைப்பட விழாவில் தி கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது.[7]