பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூட்டனாடில் குளோரைடு | |
வேறு பெயர்கள்
பியூட்டைரைல் குளோரைடு
n-பியூட்டைரைல் குளோரைடு பியூட்டனாயில் குளோரைடு | |
இனங்காட்டிகள் | |
141-75-3 | |
ChEMBL | ChEMBL1300263 |
ChemSpider | 8523 |
EC number | 205-498-5 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8855 |
| |
UNII | 2XVM8E16IR |
UN number | 2353 |
பண்புகள் | |
C4H7ClO | |
வாய்ப்பாட்டு எடை | 106.55 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | காரம் |
அடர்த்தி | 1.033 கி/செ.மீ3 |
உருகுநிலை | −89 °C (−128 °F; 184 K) |
கொதிநிலை | 102 °C (216 °F; 375 K) |
சிதைவடையும் | |
கரைதிறன் | டை எத்தில் ஈதர் கரைப்பானில் கலக்கும் |
-62.1·10−6 செ.மீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.412 |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நீருடன் தீவிரமாக வினையில் ஈடுபடும், தீப்பற்ரி எரியும், அரிக்கும் |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H314 | |
P210, P233, P240, P241, P242, P243, P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 21.7 °C (71.1 °F; 294.8 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பியூட்டைரைல் குளோரைடு (Butyryl chloride) என்பது C4H7ClO என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். CH3CH2CH2C(O)Cl என்ற அமைப்பு வாய்ப்பாட்டால் இதை அடையாளப்படுத்தலாம். விரும்பத்தகாத வாசனையுடன் நிறமற்ற திரவமாகக் காணப்படுகிறது. பியூட்டைரைல் குளோரைடு கரிம கரைப்பான்களில் கரையும். ஆனால் தண்ணீர் மற்றும் ஆல்ககால்களுடன் உடனடியாக வினைபுரிகிறது. பொதுவாக பியூட்டைரிக் அமிலத்தின் குளோரினேற்ற வினை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.[1]
தொடர்புடைய அசைல் குளோரைடுகளைப் போலவே, பியூட்டைரைல் குளோரைடும் உடனடியாக நீராற்பகுத்தல் வினைக்கு உட்படுகிறது:
ஆல்ககால்களுடன் வினையில் ஈடுபட்டு எசுத்தர்களைக் கொடுக்கிறது:
அமீன்|அமீன்களுடன் வினைபுரிந்து அமைடுகளைக் கொடுக்கிறது:
பூச்சிக்கொல்லிகள், மருந்துகள், வாசனை திரவியங்கள், பலபடியாக்கல் வினையூக்கி மற்றும் சாயப் பொருட்கள் தயாரிப்பில் பியூட்டைரைல் குளோரைடின் வழிப்பெறுதிகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக பியூட்டைரைல் குளொரைடும் மருந்து, வேளாண் இரசாயனங்கள், சாயங்கள், எசுத்தர்கள் மற்றும் பெராக்சைடு சேர்மங்களைத் தயாரிப்பதற்கான கரிமத் தொகுப்பு வினைகளில் பியூட்டைரைல் குளோரைடு ஓர் இடைநிலையாக பயன்படுத்தப்படுகிறது. [2]