பிரகாஷ் கோவெலமுடி Prakash Kovelamudi | |
---|---|
பிறப்பு | கோவெலமுடி பிரகாஷ் ராவ் 25 சூன் 1975 ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா (நவீன தெலங்காணா, இந்தியா) |
பணி | இயக்குநர் |
வாழ்க்கைத் துணை | கனிகா திலான் (தி. 2014; ம.மு. 2017) |
உறவினர்கள் | கோ. சூ. பிரகாஷ் ராவ் (தாத்தா) கோவெலமுடி ராகவேந்திர ராவ் (தந்தை) சோபு எரலகட்டா (மைத்துனர்) |
பிரகாஷ் ராவ் கோவேலமுடி (Prakash Rao Kovelamudi) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் மற்றும் நடிகரும் ஆவார். இவர், பல்வேறு மொழிகளில் மாற்றுத் திரைப்படங்களுக்கான தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். இவர் பாலிவுட்டிலும் நடிப்பில் அறிமுகமானார். பின்னர் 53வது தேசிய திரைப்பட விருதுகளில் தெலுங்கில் சிறந்தத் திரைப்படமான பொம்மலட்டா (2004),[1] கற்பனைத் திரைப்படமான, அனகனகா ஓ தீருடு (2011), மற்றும் கருப்பு நகைச்சுவைப் படமான, ஜட்ஜ்மெண்டல் ஹை கியா (2019) ஆகிய படங்களை இயக்கினார்.[2] லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் திரைப்பட நிறுவனத்தின் முன்னாள் மாணவரான பிரகாஷ், மூத்த இயக்குனர் கோவெலமுடி ராகவேந்திர ராவின் மகனும் கோ. சூ. பிரகாஷ் ராவின் பேரனும் ஆவார்.[3]
கோவேலமுடி தெலுங்கில் நீத்தோ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[4] இராஜமௌலியின் இயக்கத்தில் ஒரு படத்தில் இவர் நடிக்கவிருந்தார். ஆனால் படம் பின்னர் கைவிடப்பட்டது.[5] இவரது இயக்கத்தில் வெளியான படங்களில் பொம்மலட்டா மற்றும் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் விநியோகித்த தெலுங்கு கற்பனைத் திரைப்படமான அனகனகா ஓ தீருடு ஆகியவை அடங்கும்.[6][7] ஆர்யா மற்றும் அனுசுக்கா செட்டி நடித்த இஞ்சி இடுப்பழகி படத்தையும் இயக்கியுள்ளார்.[8] இவரது மிக சமீபத்திய படமான ஜட்ஜ்மெண்டல் ஹை கியா மனநலப் பிரச்சினைகளைக் குறிக்கும் ஒரு கருப்பு நகைச்சுவைத் திரைப்படமாகும்.[9]
கோவேலமுடி 2014 இல் கனிகா தில்லான் என்பவரை மணந்தார். பின்னர் இவர்கள் 2017 இல் விவாகரத்து பெற்றனர்.[10]