பிரசாத் முரெல்லா | |
---|---|
பிறப்பு | விசயவாடா, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்திய ஒன்றியம் |
பணி | ஒளிப்பதிவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–தற்போது வரை |
பிரசாத் முரெல்லா (Prasad Murella) என்பவர் ஒரு இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் முதன்மையாக தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இவர் முதலில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இவர் விசயவாடாவில் பிறந்தார். அங்கேயே பள்ளிக் கல்வி, உயர் கல்வி போன்றவற்றை முடித்தார். திரைப்படங்களின் மீதான ஆர்வம் காரணமாக, இவர் சென்னைக்குச் சென்று ரவி யாதவ், டி. சங்கர் போன்ற பல ஒளிப்பதிவாளர்களிடம் உதவியாளராக இருந்தார்.
2000 ஆம் ஆண்டில் சுந்தர் சி. இயக்கிய அழகான நாட்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் தெலுங்கில் 2004 ஆம் ஆண்டில் சறீனு வைட்லா இயக்கிய வெங்கி படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார், அதே ஆண்டில் சாந்தி என்ற மற்றொரு படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தார். இவர் 2004 ஆம் ஆண்டில் தேவதையைக் கண்டேன் படத்தின் வழியாக மீண்டும் தமிழ் படங்களில் பணிபுரியச் சென்றார். 2006 ஆம் ஆண்டு வரை சின்னா, ரெண்டு ஆகிய படங்களுக்கு பணிபுரிந்தார்.
2007 ஆம் ஆண்டில், தெலுங்கு படமான தெலு படத்திலிருந்து மீண்டும் தெல்ங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யத் தொடங்கினார். அதன்பிறகு தெலுங்கு திரைத்துறையிலேயே இருந்து வருகிறார். நமோ வெங்கடேசா படத்திற்கான சிறந்த ஒளிப்பதிவாளருக்கான 2010 ஆண்டிற்கான நந்தி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1] இது ஆந்திர அரசு வழங்கிய விருது ஆகும். சிறந்த ஒளிப்பதிவாளருக்கான (தெலுங்கு) சிமா விருதையும் 2013 ஆம் ஆண்டு அத்தாரிண்டிகி தாரேதி திரைப்படத்திற்காக பெற்றார்.[2]
ஆண்டு | திரைப்படம் | மொழி | விருதுகள் மற்றும் சாதனைகள் |
---|---|---|---|
2001 | அழகான நாட்கள் | தமிழ் | |
2003 | வின்னர் | தமிழ் | |
2004 | வெங்கி | தெலுங்கு | |
சாந்தி | தெலுங்கு | ||
தேவதையைக் கண்டேன் | தமிழ் | ||
2005 | சின்னா | தமிழ் | |
2006 | ரெண்டு | தமிழ் | |
2007 | தே | தெலுங்கு | |
ராஜு பாய் | தெலுங்கு | ||
சந்தமாமா | தெலுங்கு | ||
2008 | ரெடி | தெலுங்கு | |
ராஜா | தெலுங்கு | ||
2010 | நமோ வெங்கடேசா | தெலுங்கு | சிறந்த ஒளிப்பதிவாளருக்கான நந்தி விருது [1] |
2011 | தூக்குடு | தெலுங்கு | |
2012 | பூலா ரங்காடு | தெலுங்கு | |
2013 | ஷேடோ | தெலுங்கு | |
அத்தாரிண்டிகி தாரேதி | தெலுங்கு | சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சியாமா விருது (தெலுங்கு) [2] | |
2015 | எஸ் / ஓ சத்தியமூர்த்தி | தெலுங்கு | |
சௌக்யம் | தெலுங்கு | ||
2017 | கட்டமராயுடு | தெலுங்கு [3] | |
எம்.எல்.ஏ. | தெலுங்கு [4] | ||
2018 | பாந்தம் | தெலுங்கு | |
2019 | வெங்கி மாமா | தெலுங்கு | |
2021 | டக் ஜெகதீஷ் | தெலுங்கு |