தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | முரளிகிருஷ்ணா பிரசித் கிருஷ்ணா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 19 பெப்ரவரி 1996 பெங்களூர், கருநாடகம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 2 அங் (1.88 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை விரைவு வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே ஒநாப (தொப்பி 234) | 23 மார்ச் 2021 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015–தற்போது வரை | கருநாடகத் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018–தற்போது வரை | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPN Cricinfo, 23 March 2021 |
பிரசித் கிருஷ்ணா (Prasidh Krishna பிறப்பு: பிப்ரவரி 19, 1996) ஓர் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.இவர் கர்நாடகாவுக்காக உள்ளூர்த் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுகிறார். இவர் வலது கை விரைவு வீச்சாளர் ஆவார்.[1][2] ஐ.பி.எல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.[3] மார்ச் 2021 இல் இந்திய அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார். அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியில் 4 இலக்குளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
மூன்று முன்னணி கர்நாடக விரைவு வீச்சாளர்கள் இல்லாத நிலையில், வங்காளதேச அ-க்கு எதிரான சுற்றுப்பயண போட்டியில் கர்நாடகா அணிக்கு முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமான இவர் 49 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இலக்குகளை வீழ்த்தியதன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். தனது முதல் பந்திலேயே ரோனி தாலுக்தாரை ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் அனமுல் ஹக், சௌமியா சர்க்கார் மற்றும் நசீர் உசைன் ஆகியோரின் இலக்குகளை வீழ்த்தி வங்காளதேச அணியினை 41 ஓட்டங்களில் 5 இலக்குகள் என்று கட்டுப்படுத்த உதவினார். இந்தப் போட்டியில் கர்நாடகா 4 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[4][5]
இவர் பிப்ரவரி 25, 2017 அன்று 2016-17 விஜய் அசாரே கோப்பை தொடரில் கர்நாடகாவுக்காக தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[6] 21 சனவரி 2018 அன்று 2017–18 சையத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில் கர்நாடகாவுக்காக தனது இருபது20போட்டியில் அறிமுகமானார்.[7]
2018–19 விஜய் அசாரே கோப்பையில் கர்நாடகா அணிக்காக முன்னணி விக்கெட் வீழ்த்தியவராகத் திகழ்ந்தார். ஏழு போட்டிகளில் பதின்மூன்று இலக்குகளைக் கைப்பற்றினார்.[8]
மார்ச் 2021 இல், இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்தியாவின் ஒருநாள் அணியில் அவர் இடம் பெற்றார்.[9] 2021 மார்ச் 23 அன்று இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.[10] இவர் ஜேசன் ராய் என்பவரை முதல் இலக்காக வீழ்த்தினார். தனது முதல் போட்டியிலேயே 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.இந்தப் போட்டியில் இந்திய அணி 66 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
2023 உலகக் கிண்ணத்துடுப்பட்டத் தொடரில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியதால் இவர் அணியில் இடம்பெற்றார்.[11]
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)