பிரிஜலால் நேரு (Brijlal Nehru) (5 மே 1884 – 27 மே 1964) இவர் ஓர் குறிப்பிடத்தக்க அரசு ஊழியரும், நேரு குடும்பத்தைச் சேர்ந்தவருமாவார் .
இவர் பண்டிட் நந்தலால் நேருவின் மகனும் ( மோதிலால் நேருவின் மூத்த சகோதரர்), ஜவகர்லால் நேருவின் உறவினரும் ஆவார். நந்தலால் நேரு 11 ஆண்டுகள் கேத்ரி மாநிலத்தின் திவானாக இருந்தார். [1]
இவர் 1884 மே 5 அன்று அலகாபாத்தில் பிறந்து, ஆனந்த் பவனில் வளர்ந்தார். இவர் 1905 ஆம் ஆண்டில் இந்திய அரசுப் பணிக்கு போட்டியிட மோதிலால் நேருவால் ஆக்சுபோர்டுக்கு அனுப்பப்பட்டார். இவர் தணிக்கை மற்றும் கணக்கு சேவையின் மூத்த அதிகாரியாக இருந்தார். ஓய்வு பெற்ற பின்னர், மகாராஜா ஹரி சிங்கின் ஆட்சிக் காலத்தில் ஜம்மு-காஷ்மீர் அரசின் நிதி அமைச்சராக பணியாற்றினார். [1]
இவர் ஒரு பிரபலமான சமூக மற்றும் பெண்கள் ஆர்வலரும், சுதந்திரப் போராளியும், 1955 ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருது பெற்றவருமான இராமேசுவரி ரெய்னாவை மணந்தார். [2] இரமேசுவரி பின்னர், 1961 இல் லெனின் அமைதி பரிசை வென்றார். [3]
இவர்களின் மகன் பிரஜ் குமார் நேரு (1909-2001), ஒரு நிர்வாகியும் பத்ம விபூசண் பெறுநரும் ஆவார். [4]
இவர் 1964 மே 27 அன்று இறந்தார். [5]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)